நறுமுகை 55

Magsimula sa umpisa
                                    

அவளும் வந்துட்டா....அவக்கிட்ட ஃபோன் வாங்கி வீடியோவ ப்ளே பண்ணிக்காட்டுனேன்.....

ரேஷ்மா மூஞ்சில ஈ ஆடல.....

"ஆதாரம் இருக்கா ஆதாரம் இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருந்தியே.....இதோ பாரு ஆதாரம்....நல்லா நச்சுன்னு இருக்குதா..நான் கூட டைமாகும்னு நினைச்சேன்.....நீ என்னடான்னா டக்குன்னு உன்மைய ஒத்துக்கிட்டு.....நேரத்தை மிச்சம் படுத்திட்ட......"னு சொன்னேன்....

அவ அமைதியா நின்னுட்டு இருந்தா....

"ஏன்டி நீயெல்லாம் வில்லியா இருக்குவே ப்ரயோஜனம் இல்ல....சரியான காமெடி பீஸா இருக்குற....நான் உன்கிட்ட தனியா பேசணும்னு கூப்டுறேன்....எதுக்கு கூப்டுறேன்னு யோசிக்க மாட்ட......இப்புடியா உன்மைய ஒத்துக்குறது.....உனக்கு ட்ரெய்னிங் பத்தாது ரேஷ்மா....உன் அம்மாவ நல்லா ட்ரெய்னிங் குடுக்க சொல்லு ஓகேவா.....அவுங்க உள்ள போனதுக்கு அப்புறம் நான் உனக்கு ட்ரெய்னிங் தரேன்...."னு சிரிச்சிட்டே சொன்னேன்...

அவ அழுகுற மாதிரி போய்ட்டா....

"அச்சச்சோ ஸ்வாத்தி இங்க பாரு டி ரேஷ்மா கண்ணுல கண்ணீர் வருது.....உன்னால நம்ப முடியுதா...."னு கேட்டேன்

ஸ்வாத்தி என்னைய பாத்து சிரிச்சிட்டே இல்லன்னு சொன்னா....

"இங்க பாரு இது என்கிட்ட சேஃப்டியா தான் இருக்கும்....எதாவது ஏடாக்குடமா பண்ணுறன்னு தெரிஞ்சது....அப்புறம் இந்த வீடியோ எங்க போகனுமோ போய்டும்.....

அதுனால ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ.....வரேன் செல்லம் பாய்.....அப்புறம் அம்மாவ ரொம்ப கேட்டேன்னு சொல்லு...."னு சிரிச்சிட்டே சொல்லிட்டு போய்ட்டேன்....

நானும் ஸ்வாத்தியும் க்ளேஸ்க்கு நடந்து போய்க்கிட்டே இருந்தோம்....

"என்னால இன்னும் நம்ப முடியல டி...அம்மானா பிள்ளைங்க பண்ணுற தப்ப திருத்தக்க தான் சொல்லுவாங்க....ஆனா இங்க என்னடான்னா பொண்ணு பண்ணுறது தப்புன்னு தெரிஞ்சும் அம்மா அவக்கூட சேந்துக்கிட்டு இவ்வளோ கீழ்த்தரமான வேளைய பண்ணிருக்குறாங்க.....
சி என்ன அம்மா டி அவுங்க....."னு ஸ்வாத்தி சொன்னா

 நறுமுகை!! (முடிவுற்றது)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon