கண்டீஷன்

4.3K 153 19
                                    

                       கௌதம்

தன் அருகில் உறங்கி கொண்டிந்த யாழினியை பார்த்த கௌதம், சில நிமிடத்திற்கு முன்னால் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான்.

"சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. என்னைய பொருத்தவரை லைஃப் ஒரு தடவதான். அந்த ஒரு லைப்ல கல்யாணம் பண்ணீட்டோம்ன்னு ஒரே காரணத்துக்காக ஸ்சக்கிறிஃப்பைஸ் பண்ணீட்டு அப்புறம் லைஃப்ல ஒரு பாய்ட்ல போய் நம்ம எவ்வளவு தியாகம் பண்ணிருக்கோம்னு யோசிக்கிறதாலேயும் இல்ல இவ்வளவு  நாள் ஸ்சக்கிரிப்ஃபஸ் பண்ணீட்டோம்ங் கரத்துக்காக நம்மல ஏமாத்திட்டு வாழ்ரதுலயும் அர்த்தமே இல்ல. சோ என்னகாக நீங்களும் உங்களுக்குகாக நானும் எதுவும் மாத்திக்க வேண்டாம். " என்று அவள் முடிக்க கௌதம் வாய்பிளந்தான்.

(ப்பா! யாழினியா இது!)  என்று கண்களை கசக்கினான், இது கனவில்லை என உணர்ந்தவன் (இவ்வளவு நாள் வாய் திறந்த இரண்டு வார்த்த பேசுறதுக்கே யோசிச்ச யாழினியா இது! இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி இருந்துகிட்டு என்ன ஒரு பேச்சு!)  "உங்களோட ப்பர்சனல் ஸ்பேஸ்க்குல்ல நான் வரமாட்டேன் அதே மாதிரி எனக்கும் நீங்க என்னோட ப்பர்சனல் ஸ்பேஸ்ச நீங்க தரனும்." என்று கூறிவிட்டு கண்களில் நம்பிக்கையோடு கௌதமை பார்த்தாள்.

"நீ எப்பவும் இப்படிதானா இல்லேனா இன்னிக்குதான் இப்படி பேசுரேயா? " என்று கேட்க. அசடு வழிய யாழினி, "எப்பவும் இப்படிதான்." என்று கூறிய யாழினியிடம், "  நீ ரொம்ப அமைதியான பொண்ணுனு நினைச்சேன். " என்று அவன் பேச்சை வளர்க்க கூற, "அப்படியெல்லாம் இல்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு யார்ட்டனாலும் கேட்டு பாருங்க. " என்று அவளது குரல் இறங்கியது. "ஆனா நான் உன்னைய மீட் பண்ணபோதெல்லாம் மேம் ஒரு வார்த்தைகூட யோசிச்சுதானே பேசுனீங்க! " என்று பேச்சை வளக்க, "அது..... " என்று அவள் முழிக்க, "எது..." என்று அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த,  "ம்..... " என்று யாழினி வார்த்தை தேட. "ப்பபா!  என்ன அமைதி ஆயிட்ட? இவ்வளவு நேரம் க்ளாஸ் எடுத்த யாழினிக்கு என்ன ஆச்சு? " என்று நக்கல் அடிக்க, யாழினி முகம் மாற (அய்யய்யோ! சீரியஸ் ஆராலே!) லேசாக சிரித்தவன், "யே! சும்மாதான் கலாய்சேன். கூல்! " என்றான்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now