ஜீவாவின்  இந்த  ஆறுதல் விஷ்ணுவிற்க்கு  கட்டாயம்  தேவைப்பட்டது . இதுநாள்  வரையில்  யாருக்கும்  தெரியாமல்  தன் மனத்திற்க்குள்ளேயே  போட்டு  உழன்றுகொண்டிருந்தவனுக்கு  இந்த  தேற்றுதல் பசியில்  இருந்த  குழந்தைக்கு  வயிறு  நிறைய ஆகாரம்  கிடைத்த திருப்தியை உண்டுபண்ணியிருந்தது . 

          “ ரொம்ப  தேங்க்ஸ்  ஜீவா …  இப்போ  கொஞ்சம்  ரிலாக்ஸ்டா இருக்குடா …. “ என்றவன்  சட்டென்று  ஏதோ  நினைவு  வந்தவனாக  “ஜீவா …. இப்போ  ராம்  வெளியதானே  போய்ருக்கான். வா  அவன்  ரூம்ல  ஏதாவது  கிடைக்குதான்னு  பார்ப்போம். ஐ ஆம்  நாட்  ஷ்யூர்  அங்க  எதுவும்  கிடைக்கலாம் மே பீ கிடைக்காமலும்  போகலாம் . ஆனா  ஏன்  சான்ஸ மிஸ்  பண்ணணும் . ட்ரை  பண்ணி  பார்க்கலாமே !”  விஷ்ணுவிடம்  ஒரு  விதமான  பரபரப்பு  தொற்றிக்கொண்டது . 

"ஹே… ஆமாண்டா … நீ சொல்றது சரிதான்… இது ஏன் ஃபர்ஸ்டே நமக்கு தோணாம போய்டுச்சு… வா வா சீக்கிரம் போகலாம். அவன் வறர்துக்குள்ள ஏதாவது மாட்டுதான்னு பார்க்கலாம்" என்றவனுக்கு விஷ்ணுவின் பரபரப்பு இடம்மாறியது.

          இருவரும்  விஷ்ணுவின்  அறையிலிருந்து  வெளிவந்தனர் .  விஷ்ணுவின்  அறை  மாடியில்  இருப்பதால்  அவன்  அறை  வாசலிலிருந்து  பார்த்தால்  கூடத்தில்  நடப்பவை  அனைத்தும்  தெரியும் . இருவரும்  அப்போது  சரியாக  கூடத்தைத்தான்  பார்த்தனர் . அங்கே   ஒருவரும்  கண்களுக்கு  அகப்படவில்லை .  ராம்  இன்னும்  வரவில்லை  என்பது  அவனது  கார்  வீட்டின்  முகப்பில்  இல்லாததில்  இருந்து  ஊர்ஜிதமானது. 

           ராமின்  அறையை  அடைந்தவுடன்  முதல்  வேளையாக  கதவை  தாழிட்டனர்  இருவரும் . ஆளாளுக்கு  ஒவ்வொரு  இடத்தில்  ஆராய  ஆரம்பித்தனர் .  டேபிள்  ட்ராயர் , அலமாரி, ஏன் டஸ்ட்பின் முதற்கொண்டு     தேடிக்கொண்டிருந்தனர் .  இன்ன   பொருளைத்தான்  தேடுகிறோம்  என்று  நினைத்து  தேடினாலே  அப்பொருள்  சற்று  நீண்ட  இடைவெளிக்கு  பிறகுதான்  கைக்கு  வரும் . இவர்கள்  என்ன  தேடுகிறார்கள்  என்று  இவர்களுக்கே  தெரியாத  பட்ஷத்தில்  இவர்களின்  தேடுதலின்  ஆயுட்காலமும்  நீண்டு  கொண்டே  சென்றது 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now