என் காதல்-34

Start from the beginning
                                    

எட்டினாள் அவனை தொட்டு விடலாம்  தான் 'என்ன பன்னலாம்?' என்று யோசித்தவள் தன் அறைக்குள் சென்று தன் பெஸ்ட் எய்ட்ஸ் பாக்சில் உள்ள இரத்த கட்டுபாடு செய்யும் மருந்தை எடுத்து கொண்டு பெல்கனிக்கு வந்தாள்.... அவனின் கண்கள் மெதுவாக மூட பட்டுக்கொண்டு இருந்தது இதற்கு மேல் இரத்தம் லீக் ஆவது சரியில்லை.... அவனது சிவப்பு முகம் மஞ்சலாகி கொண்டு இருந்தது... உடனே தன் உடலை பாதி பெல்கனிக்கு வெளியே போட்டு அவன் கையை எடுத்து அதில் அந்த மருந்தை வைத்தாள்....

அவனுக்கு பேசும் தெம்பில்லை ஆனால் வித்யா தொட்டதும் மெதுவாக கண்ணை திறந்து பார்த்து.... வாய்க்குள் முனுமுனுத்தான்...
"தும் கவுன் ஹோ? கியா கர் ரஹி ஹோ" என்று விட்டு அவனது கையை இழுத்துக்கொண்டே ஏதோ சொன்னான் "மேரா ஹாத் சோட் தென்" என்றான் அதன் மீனிங் புரியாமல் இருந்தது

'அய்யோ ஹிந்திகாரனா இவன் இப்போ என்ன பன்றது உதவியும் பன்னனும் இவர் பேசுரதும் புரியல்ல ஆரம்பமே சரி இல்லையே' என்று நினைத்த விது அவனை பார்த்து...

"முஸே ஹிந்தி ஆத்தி நெஹி க்யா ஆப் இங்லிஷ் மி பொலேங்கே?" என்றதும் அவன் மயங்கி விட்டான் இரத்தம் வெளியாவது நின்று விட்டாலும் அவன் மயங்கி விட்டான்....

'அய்யயோ நாம பேசின ஹிந்திக்கு பயந்து மயங்கிட்டானா கடவுளே இப்ப என்ன பன்றது இந்த பையன நான் எப்படி மொழி தெரியாத ஊர்ல காப்பாத்துவேன்?" என்று நொந்து கொண்டாள்.....

அவனது கையை விட்டதும் அவன் அப்படியே கீழே விழுந்தான் எட்டினாலும் தொட முடியாமல் போய்விட்டது.... 'அய்யோ' என்று தலையில் அடித்துக்கொண்டவள்.... பெல்கனியை விட்டு உள்ளே சென்று நேரத்தை பார்ததாள் ஒன்பது மணி ஆகி இருந்தது 'இப்ப பக்கத்து ரூம்ல ஹெல்ப் கேக்கவும் முடியல்லயே நைட் டைம் ஆகிருச்சில" என்று பதறிக்கொண்டே தன் ரூமை விட்டு வெளியே வந்தாள்... தன் பக்கத்து ரூம் காரனின் ரூம் நம்பரை பார்த்தவள் ரிஸப்ஷனுக்கு கால் செய்து
அர்ஜென்ட்டாக ரூம் நம்பர் 216 க்கு வருமாறு கூறினாள்....
அவளும் தன் ரூமை லாக் செய்து விட்டு பணபேர்ஸை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்....

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now