உன்னில் நான் வாழ்கிறேன்

158 2 0
                                    

தன்னை தானே செதுக்கி
சுற்றுத்துடன் அன்பு செலுத்தி
அன்பானவர்களாக்கி
தானாய் வளர்ந்த
காட்டுமரம் அவள்....

எவராயினும்
தவறு செய்தால்
தண்டனைதானென
உறுமும் தைரியசாலியவள்.....

அவளும் கோழையானால்
தைரியம் இழந்தால்
பழிசொலேற்றாள் அவனால்
அவன் மீது வந்த
பொல்லாக் காதலினால்...

அவளின் அன்பை ஆயுதமாக்கி
சந்தர்பத்தை சாதகமாக்கி
தன்னை தானே கத்தியின்
பிடியில் வைத்து
மணம் செய்தானவளை அவன்..

அவளை மனபூர்வமாய்
காதலிப்பதாய் கூறிய அவன்...

இருமனம் மட்டுமே
அறிந்த திருமணம் அது...

அவனின் காதலால்
கசிந்துருகி
கருவுற்றாள் அவளும்...
அதை கலைக்க
செய்தான் அவனும்....

அவளின் சிறு தவறு
பெரும் பழியாய்
சுமக்கிறாள் இன்று...

காதலானவனே
அவளை யாரென்று கேட்டான்
அவனின் திருமண மேடையில்...

தான் ஏமாந்ததே
ஏமாற்றப்பட்டதே
அப்போது தான்
அறிந்தாள் பேதையவளும்....

காதல் செய்தவனே
காயம் செய்த நிலையில்

காயமான ரணத்தில்
அமிலத்தை ஊற்றிய
வலியை உணர்ந்தாள்
சுற்றத்தாரின் பழிச்சொல்லில்....

தவறுக்கு தண்டனைக் கொடுத்து
பழக்கப்பட்டவள்..

தானே தண்ணடனைக்குள்ளானாள்
தான் ஏமாந்து போன தவறால்....

நான்கு சுவற்றுக்குள்ளே
முடங்கி கொண்டாள்..

எவரையும் நம்பும்
திறனற்று போனாள்....

தன் வாழ்வே நரகமாய்
மாறியதன் விந்தை உணர்ந்தாள்...

அவளின் காயத்திற்கு மருந்தாய்
ரணத்திற்கு பன்னீர் தெளித்து
காயமாற்றுபவனாய்
தேவதையின் ஆண்பாலாய்
தேவதூதனாய் வந்தானவன்....

இவனும் சூழ்நிலை உருவாக்கி
சந்தர்பத்தை சாதகமாக்கி
மணம் செய்தான் இவளை...

ஆனால் இவள் மேல்
உயிர்காதல் கொண்டு
ஊர் கூட்டி
சம்ரதாயப்படி
பெற்றோர் முன்னிலையில்
இவள் தன்னவளென
மணம் செய்தான் இவன்..

இவளுக்காய்
தேக்கி வைத்த
மொத்த காதலையும்
இவன் அள்ளி வழங்க...

இருதலை கொள்ளியாய்
அதை ஏற்கவும் முடியாமல்
வாழவும் முடியாமல்
தவிக்கிறாள் இவள்....

பெண்ணே,
உன் தவறை எண்ணி
உன் தேவனுக்கு
தண்டனை அளிக்கிறாயே
இது எவ்விதத்தில் நியாயம்???

உன்னவன்
உன்னை பற்றி
முழுவதும் அறிந்த உன் தேவன்..

உன்னை தனக்கானவளாய்
ஏற்று நேசம் மட்டுமே
காண்பிக்கும் உன் மன்னவன்..

அவனின் காதலுக்கு
நீ செய்யும் நன்றி
இது தானா??

நீ இழுபிறவியென்றால்
தேவதூதன் உன்னை
நேசிப்பானா??

உன் தோழிகளின்
அன்புத்தொல்லை
உனக்கு கிட்டியிருக்குமா???

உன்னையும் கழுவிலேற்றி
ஏதும் தவறிழைக்கா
அவனையும் கொல்லுவதேனோ???

உன் தவறுகள்
மன்னிக்கப்பட்டு
நீ இரட்சிக்கப்பட்டதை
உணரவில்லையா இன்னும்???

தூய அன்பின் நேசத்தையேற்று
அவனுடன் கூடி மகிழ்ந்து
வாழ்வாய் பெண்ணே!!!

அவனின் காதலுக்கு
நீ செய்யும் நன்றிக்கடன்
அதுவே கண்ணே!!!!

-- நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now