நறுமணம் 1

Start from the beginning
                                    

அதை என் அப்பத்தான் புரிஞ்சுக்கவே இல்ல....

ஆனா நாங்க பொண்ணுங்களா பொறந்துட்டோம்னு  என் அம்மாவும் அப்பாவும் என்னைக்கும் வருத்தப்பட்டது இல்லை.....
எங்கள அவுங்க பாசமாதான் பாத்துக்கிட்டாங்க....எங்களுக்கு காசு பணத்துக்கு பஞ்சமே இல்லை....தாத்தா அந்த காலத்துலையே ஊருல நிலம் நிறைய வச்சிருந்தாரு....அப்பா ஒரே ஒரு பையன்றதால எல்லாமே அப்பாக்குதான்....

என்னதான் அப்பாக்கு காசு பணம் இருந்தாலும்...எங்க மேல பாசம் இருந்தாலும்.. கொஞ்சம் ஊரு சொல்லுக்கு பயந்து வாழுறவரு....சொல்வார் கேட்பிள்ளை.......

அடுத்தவங்க எதாவது சொல்லிரக்கூடாதுன்னு யோசிச்சு ஒவ்வொரு முடிவையும் எடுப்பாரு....அதுக்கு காரணம் அவரு காதலிச்சு திருமணம் பன்னதால ஊருக்குள்ள அதைப்பத்தி எல்லாரும் ஒருமாதிரி பேசுவாங்க....அதுனால ஊருல எங்களை பத்தி எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு நினைக்குறாரு.....அதுமட்டும் இல்லாம ஊருல என்ன சொல்றாங்களோ அதை அப்புடியே ஏத்துப்பாரு....
அப்புடி யோசிச்சதுனாலதான் என் அக்காவோட கணவுகளுக்கு சமாதிகட்டிட்டு அவள வீட்டுல உக்கார வச்சுட்டாங்க.....

எங்க ஊருல படிச்சவங்க கம்மி....அதுலையும் படிச்ச பொண்ணுங்க ரொம்ப கம்மி.....மிஞ்சி மிஞ்சி போனா எங்க ஊருல பொண்ணுங்க பண்ணென்டாம் வகுப்பு வரைக்கும் படிக்குறதே அதிசயம்.....
எங்க ஊருல வசுந்தரான்னு ஒரு அக்கா இருக்குறாங்க....அவுங்க டவுனுல போய் காலேஜ்ல படிச்சிட்டு வந்தாங்க....அவுங்க படிச்சிட்டு ஊருக்கு வந்தப்போ ஊருல அவுங்களுக்கு  எவ்வளோ மரியாத தெரியுமா.....

அதை பாத்துட்டு என் அக்காக்கும் அதுமாதிரி டவுனுக்கு போய் படிக்கனும்....அவுங்கள பாராட்டுன மாதிரியே அவளும் பாராட்டு வாங்கனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சு....

என் அக்கா போய் அந்த வசுந்தரா அக்காக்கிட்ட அவளும் அவுங்கள மாதிரியே டவுன்ல போய் காலேஜ்ல படிக்கனும் அதுக்கு என்ன பன்னனும்னு கேட்டா....அதுக்கு அவுங்க ஸ்கூல்ல நல்லா படிச்சு நிறைய மார்க் எடுத்தா அவ நினைச்ச மாதிரியே நல்ல காலேஜ்ல படிக்கலான்னு சொன்னாங்க....அப்புடி அவ ஸ்கூல்ல நல்ல மார்க் எடுத்தா அவள நல்ல காலேஜ்ல சேக்குறதுக்கு உதவி பன்றேன்னு சொனாங்க.....என் அக்காவுக்கு அதைக்கேட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிடுச்சு....

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now