கீர்த்திக்கு கண்ணணிண் கோபத்தில் இருந்த நியாயம் சுட,  ' ஆனாலும் இவண் நான் என்ன சொல்ல வர்ரேன்னு கூட கேட்காதவன். என் குடும்பத்தை மதிக்காதவன். இவன நான் ஏன் மதிக்கனும்? '

" இப்ப  நீ மனுசன்னு யார் சொன்னது கண்ணா.  இப்ப நீ ராட்சசன். அதுவும் பைத்தியம் பிடிச்ச முட்டாள் ராட்சசன். " என்றாள் சுவற்றை பார்த்து.

அறைக்குள் வந்ததிலிருந்து பேசாதவள் திடீரென பேசவும், கண்ணணிண் கோபம் குறைந்து இயல்பானான்.

மெல்லிய குரலில் " மனுசனா இருந்தா தான் உங்களுக்கு என்னை பிடிக்காதே.  அதுக்கு நான் ராட்சசனாவே இருந்துட்டு போறேன்".

என்றவன் தனக்குள் பிடிவாதமாய்
' அதுவும் என் பொம்மை மேல பைத்தியம் பிடிச்ச ராட்சசனாவே இருந்துட்டு போறேன். ' என்று நினைத்தவன், கீர்த்தி 'முட்டாள் '  என்றதை தாமதமாக நினைவுக்கு கொண்டு வந்து 

" என்னை பார்த்தா முட்டாளா தெரியுதா உனக்கு? " என்றான் கேள்வியாய்.

கீர்த்தி அவனை  ஒரு கணம் அலட்சியமாய் பார்த்து விட்டு " இங்க பார்,  நான் ஒண்ணும் அந்த சங்கர் கூட டூயட் பாட போகல.  அவன் என்னை கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு Thanks சொல்ல தான் போனேன். அப்புறம் கார்த்தி அவங்கள கூட்டிட்டு வந்தது கூட,  நாம நல்லாருக்கோம்னு காட்டறதுக்கு தான். இதெல்லாம் புரிஞ்சிக்காம பைத்தியம் மாதிரி நடந்துகிட்டா,  உன்னை முட்டை முட்டாள்னு சொல்லாம புத்திசாலினா சொல்வாங்க? "

கீர்த்தியின் இடத்தில் இருந்து  தான் செய்ததை எண்ணி பார்த்தவன்,  தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வருத்தமடைந்தான்.

'அதென்னது முட்டை முட்டாள்? இப்ப கேட்டா இன்னும் பேர் வைப்பா. வேண்டாம் இன்னொரு நாள் கேட்டுக்கலாம் . இப்போ பேசாம சமாதானமா போயிடலாம் '.  என்று நினைத்தவன் சமாளிப்பாய்,

"அதை நீ உன் புருசன்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே?" என்றான் .

" நீ என்ன என் காலேஜ் பிரின்சிபலா நான் எங்க போகனும்? யார்கிட்ட பேசனும்?  எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போகனுமா? இல்ல பர்மிசன் வாங்கிட்டு போகனுமா? என்னை எங்க வீட்டுல கூட கேள்வி கேட்டது கிடையாது. " என்று வெடியாய் ஆரம்பித்து  கலங்கிய குரலில் முடித்தவள்,

அவளும் நானும்Where stories live. Discover now