கோரநாடு -10. மரணக்கோட்டம்

48 5 11
                                    

மரணக் கோட்டம்:

உதறிய வாளால் உடலைக் கிழித்து
உதிரம் தெறிக்க உயிரும்- பதறிச்
சிதறும் ஒலியில் சிதைந்து மனமும்
கதறும் மரண நிலை.

நாள் முழுதும் நாடுதோறும் அலைந்துகொண்டிருக்கும் மேகங்களும் ஓய்வெடுக்கச் செல்லும் நள்ளிரவு நேரம், நகரின் வெளியில் தனிக்கோவேளின் சிற்றரசான முல்லைவனத்துக்கு சற்று அருகில் கிழக்குமுகமாக அமைந்திருந்த தலைமைக் காவற்கோட்டத்தின் உள்ளரங்கில் மூன்று உருவங்கள் தங்களுக்குள்ளாகத் தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தன.

அவற்றுள் சற்று உயரமாய் இருந்த உருவம் "கரம்பனுக்கான மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது அல்லியாரே?" என்று வினவியது.

"மக்கள் கொந்தளிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர். ஆனால் தனியாக யாரையும் எதிர்க்கும் துணிவு அவர்களுக்குக் கிடையாது. தங்களைக் காப்பாற்ற யாராவது தலைவன் வரமாட்டானா என்று ஏங்கி ஏங்கி இறந்தேபோய்விடுவார்கள். அப்படி ஒரு தலைவனை உருவாகுவதே தாங்கள் தானென்ற உண்மையையும் உணராதவர்கள். அடக்குமுறைக்கு அப்படியே பணிந்துவிடுவார்கள்.

எதிர்க்க வேண்டிய சூழல் வரும் போது சுயநல ஓட்டுக்குள் நத்தை போல் சென்று பதுங்கிக் கொள்வார்கள். அதையும் மீறி எவராவது முன்வந்தால் அவனை ஏளனம் செய்தே பின்னிழுத்துவிடுவார்கள். அவற்றையெல்லாம் அறிந்து கொண்டு அவர்களைக் குழப்பி அந்தக் குட்டையில் மீன்பிடிப்பவனையே நல்லவன் என்று நம்புவார்கள். ஆனால் எப்போதாவது ஆள்பவன் மீதே ஐயம் கொல்வாரகள். அப்படியொரு சூழல் தான் இப்போது" என்று தன் தலையிலிருந்த குடுமியை அவிழ்த்துக் கட்டியவாறே பதிலளித்தார் வடமலை அல்லிமுனி.

"அப்படியென்றால் இப்போதைக்கு மக்கள் ஆதரவை மன்னர் கரம்பனுக்கு மடைமாற்ற என்ன வழி இருக்கிறது?" என்றான் சகாதேவன்.

"அபாயகாலத்தில் அபயம் என்று வந்தவர்க்கு உபாயம் கூறி உபயமளிப்பதே எம் வழக்கமாகும். சாம தான பேத தண்டம் என நான்கு வழிகளிருக்கிற போதும் நாம் தற்போது பயன்படுத்த வேண்டியது ஒன்றுதான். கருணைக்கொலை." என்றார்.

கோரநாடுWhere stories live. Discover now