மெளனம்

50 14 16
                                    

நீண்ட கோடைக்குப் பின் வானம் கருமேகங்களை கோர்த்திருந்தது, அனலாய் வீசிய காற்று குளிராய் மாறி வீசியிருக்கும்...

மழை சிறு சிறு துளியாய் வரண்டு கிடந்த பூமியை நனைத்தது, மண் வாசனை பரவி விரிந்து பரவசமாய் நாசியை துளைத்திருக்கும்...

பகலை இருளாய் மாற்றியது பேய் மழை, பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த பூமியில் நீர் வழிந்தோடி பள்ளம் தேடியிருக்கும்...

விறைப்பாய் நின்றிருந்த இலை கிளைகளெல்லாம் வலுவாய் வீசிய காற்றிலும் மழையிலும் வெட்கிக் குணிந்திருந்திருக்கும்…

வாடைக் காற்றில் மார்போடு இரு கை கோர்த்து, பார்த்து ரசித்திடவே மனம் ஏங்கித் தவித்திருந்திருக்கும்...

பாதகத்தி உன் காரணமற்ற மௌனம் கசக்கி வீசியதடி ரசிக்கக்  காத்திருந்த என் கனவையெல்லாம்...

கவிஞனாக நான்.

இயற்கைWhere stories live. Discover now