ஒருவேளை
இவளை மனதில் வைத்துக் கொண்டுதான் இன்று டைவர்ஸ் வரை வந்து விட்டானா .அதைச் சொல்லி தொலைக்க வேண்டியது தான.  மனதில் தேவையில்லாத ஆசைகளெல்லாம் வளர்த்துக் கொண்டிருக்கமாட்டோனே. இன்னொருத்தியை விரும்பிக் கொண்டிருப்பவனை விரும்பி என்னை நானே  முட்டாளாக்கிக்கிட்டேனே ச்ச..

அவளைப் பார்க்க பார்க்க ஆதிராவிற்கு கோபம் வர அவளைக் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்தவளை ரேஷ்மா கைப் பற்றி நிறுத்தினாள்.

உன் கோபம் நியாயமானது தான்.அன்னக்கி உன்ன மிரட்டுனதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன் என்றாள்.

அதற்கு ஆதிரா பதிலேதும் கூறவில்லை.அன்று ரிசப்சனில் வைத்து மிரட்டியதற்குத் தான் மன்னிப்பு கேட்கிறாள் என நினைத்துக் கொண்டாள்.

அவளது கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் ரேஷ்மாவை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் பின்னோடு வந்தவள்...

ப்ளீஸ் ஆதிரா என்ன மன்னிச்சிரு. அன்னக்கி நீ எவ்ளோ பயந்திருப்ப சக்திக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோனு. நான் அதக் கூடப் புரிஞ்சிக்காம உன்ன சக்தியவிட்டு போக சொல்லி உன்ன அழவச்சி ச்ச எனக்கே என்ன நினைச்சா கோவம் வருது .என்ன மன்னிச்சிட்டேனு ஒரு வார்த்தை சொல்லு அதுப் போதும் என்றாள்.

அவளது வார்த்தைகளில் சட்டென் பிரேக்கடித்து நின்றவள்,..

நீ என்ன சொல்ற மதன் தான போன் பன்னி மிரட்டுனான்.

இல்ல நான் தான் ஆள் செட் பன்னி  மதன் வாய்ஸ்ல பேசவச்சி மிரட்டுனேன்.

ஆதிராவிற்கு ஒன்றுமே புரியவில்லை .மிரட்டியது இவளென்றாள் பிறகு எதற்கு மதன் தான் மிரட்டியதாக சொல்லி என்னிடம் மன்னிப்புக் கேட்டான்.ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தலை சுற்றுவதுப் போல் இருக்க தலையை பிடித்துக் கொண்டே கீழே அமர்ந்தாள்.

ஹே ஆதிரா ஆர் யூ ஓகே...என்றவள் அவளுக்கு குடிக்கத் தண்ணீர் வாங்கிக் கொடுத்தாள்.

இதய திருடா Where stories live. Discover now