அவனிடம் ஆதிராவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டியவர்,..

இவர் தான் ஆதிக்கு பார்த்த மாப்பிள்ளை. ரொம்ப நல்லக் குடும்பம் என புது மாப்பிள்ளையின் புகழ் பாட அதற்கு மேல் சக்தியால் அங்கு நிற்க முடியவில்லை அந்த போட்டோவை அவரிடம் திருப்பிக் கொடுத்தவன்,..

எனக்கு கொஞ்சம் வேலை. அவசரமா போனும் என விருவிருவென வெளியேறினான்.

நாள் முழுக்க ஆதிரா அவளது அறையிலேயே அடைந்துக் கிடந்தாள்.

தன் பெண்ணின் இறுகிய முகத்தைப் பார்த்த ராஜன் என்னவென்று விசாரிக்க ஆதிராவோ பொருந்தாதக் காரணங்களை சொல்லி சமாளித்தாள்.

அவர் அதில் திருப்தி அடையவில்லை என்றாலும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
பிறகு பேசி அவள் மனதினை அறிந்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

சக்தி வந்து சென்ற மறாவதுநாள் மாலை ஆதிராவிற்கு வருணிடமிருந்துக் கால் வந்தது.

ஹலோ அண்ணி நான் வருண் பேசறேன்.

ஹான் சொல்லுங்க ...

அது வந்து உங்கக் கிட்ட கொஞ்சம் பேசனும் .

ம்ம்ம் சொல்லுங்க ,,.

நேர்ல பாத்துப் பேச வேண்டிய விஷயம் அதானால நீங்க மாயாஜால் வந்துருங்க நானும் வந்தரேன் என்றவன் அவள் சரி எனவும் இணைப்பைத் துண்டித்தான்.

மாயாஜாலின் முதல் தளத்தில் ஒரு துணிக் கடையின் முன் நின்றிருந்தவள் வருணை போனில் அழைக்க அவன் அழைப்பை எடுக்கவில்லை.

அந்த துணிக்கடையினுள் கணவன் தன் மனைவிக்கு புடவை தேர்வு செய்துக் கொடுப்பது அவளது கண்ணில் பட்டுவிட அன்று  சக்தி தனக்கு புடவை தேர்வு செய்துக் கொடுத்தது நினைவிற்கு வர கண்ணீர் குலமமெனத் தேங்க கண்மூடி அதைக் கட்டுப்படுத்தினாள்.

ஏன்டா இப்படி என்ன கொல்ற எங்க போனாலும் யாரப் பாத்தாலும் உன் நினைப்பாவே இருக்கு என புலம்பிக் கொண்டிருந்தவளின்
தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க அங்கு ரேஷ்மா நின்றுக் கொண்டிருந்தாள்.

இதய திருடா Where stories live. Discover now