வேகமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்...

அது பி..பிரச்சனைலாம் எதுவும் இல்ல.வ..வந்து அசதியில தூங்கிட்டேன் ஒரு கெட்ட கனவு .அதான் கொஞ்சம் பயந்துன்டேன். என்றவள் சிரிக்க முயற்சித்தாள்.

பொய்.,நீ.பொய் சொல்ற...ஏதோ பிரச்சனை இருக்கு. நீ எதையோ என்கிட்டருந்து மறைக்கிற ...உண்மைய சொல்லு ஆதிரா  என சக்தி கடுமையாக வினவவும் அவனிடம் உலறிவிடுவோமோ
என்ற பயத்தில்  சக்தி கீழே போட்ட அவனது பேகையும் மொபைலையும் எடுத்தவள்
அவனது கண்ணைப் பார்க்காது,

உண்மையாலுமே கனவுதான் சக்தி வேற எதுவும் இல்ல ...நீ போய் பிரஷ் ஆகிட்டு வா நான் போய் சாப்பிட எதாச்சும் செய்யிறேன் என்றவள் பேகையும் மொபைலையும் அறையினுள் வைத்துவிட்டு கிட்சனில் நுழைந்துக் கொண்டாள்.

அவன் கண்ணைப் பார்த்து பேசுவதை அவள் தவிர்க்கவும் சக்தி உறுதிப் படுத்திக் கொண்டான் நிச்சயம் ஏதோ பிரச்சனை அவள் அதை மறைக்கிறாள் என்று.

அதே நினைவில் பிரஷ்ஷப் ஆகிவிட்டு வந்தவனின் காதில் ஆதிராவின் மொபைல் ரிங் டோன் கேட்டது.

அவனது பேகை வைக்கும் போது அவளது மொபைலையும் மறந்து வைத்துவிட்டாள்.

ஸ்கிரீனைப் பார்க்க ஒரு அன்னோன் நம்பரிலிருந்து கால் வந்தது.அழைத்தது மதன் தான்.

ஆதிராவிடம் கொடுப்பதற்காக அறைக்கதவு வரை சென்றவன் பின் ஏதோ நினைத்தவனாக அந்த காலை அட்டன் செய்தான்.

சக்தி போனை காதில் வைக்கவும் மறுமுனையில் .,.

என்னடி வந்துன்டானா சக்தி...இந்த தடவ விட்டுன்டேன் அவன. இனிமே அவன் உயிரோட இருக்கிறதும் இல்லாததும் உன் கைல. சொன்னது நியாபகம் இருக்குள்ள இரண்டே நாள் தான் டைம் அதுக்குள்ள நீ அந்த சக்திய விட்டுட்டுப் போயிடனும்.இல்லனா இன்னக்கி நான் மிரட்டுனது டிரெய்லர் தான். மெயின் பிக்சர் என்னத் தெரியுமா சக்தியோட சாவு பார்த்துக்க என ஓரே மூச்சாக எதிர் முனையில் யார் இருக்கிறார் என்பதுக் கூடத் தெரியாமல் லைனை கட் செய்தான்.

இதய திருடா Where stories live. Discover now