"சும்மா சொன்னேன் டா உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா?" என பாலா கூறிக்கொண்டிருக்கும்போதே ஜீவாவும் ராமும் ஒருவர் முறையே மற்றவர் பாலாவின் அறைக்கு வந்தனர்.

வந்தவர்கள் பாலாவின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டு சற்று நேரம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேச்சின் ஊடே ஜீவா ராமிடம் டேய் ராம் உனக்கு அத்தைப் பொண்ணு இருக்குன்னு எங்ககிட்ட சொல்லவே இல்லை!?." இப்பதான் தெரியுது நீ ஏன் காலேஜ்ல யாரையும் சைட் அடிக்கலன்னு.இவ்வளவு அழகா அத்தைப் பொண்ணு இருக்கும்போது எப்படி மத்தவங்களை பார்க்க மனசு வரும்" என நிலைமையை சுமூகமாக்க ஜீவா ராமை வம்பிற்கு இழுத்தான்.

" அட க்ராதகா உனக்கு வேற வேலை இல்லையா ? வேதா எனக்கு தங்கச்சி மாதிரிடா.....அவளும் அப்படித்தான் நினைக்கிறா .சின்ன வயசில இருந்தே நாங்க அண்ணன் தங்கையாதான் பழகுறோம்.நீ லூசு போல எதையும் உளரிட்டு திரியாதே". என கூறி அவர்களின் உறவுமுறையை தெளிவுபடுத்தினான் ராம்.

**************

சமையலறையில் தன் அத்தை கௌரிக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று உள்ளே நுழைந்த வேதா அவரை வேலை செய்யவிடாமல் தன் கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தாள்.

வேதா "அத்தை ......ராமோட ஃப்ரண்ட்ஸ் எப்போ இங்க இருந்து கிளம்புவாங்க !!? ". என கேட்டாள்.அதற்க்கு கௌரியோ அந்த பிள்ளைங்களே நேத்துதான் இங்க வந்தாங்க அதுக்குள்ள அவங்க எப்போ கிளம்புவாங்கன்னு கேக்குறியே !? ஏன் அந்த பிள்ளைங்க அவங்க பாட்டுக்கு இருந்துட்டு போறாங்க .நீ ஏன் இவ்ளோ அவசரப்பட்ற "என்று குழப்பமாக கேட்டார் கௌரி.

"அது ஒன்னும் இல்ல அத்தை அந்த விஷ்ணு இருக்காரு இல்ல அவரைப்பார்த்தா சரியான முசுடு போல இருக்காரு.பார்த்தாலே பயமா இருக்கு அதான் கேட்டேன்" என்று தன் பக்க கூற்றை எடுத்து கூறினாள்.

   “ அந்த புள்ள நல்ல பையனாச்சே… அவன் எப்பவும் எல்லார்கிட்டயும் சிரிச்ச முகத்தோட அன்பா பேசுற பையன் அவனைப்போய் முசுடுன்னு சொல்றியே…. “ 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now