சக்தி ஆதிராவை முதலில் அந்த பூங்காவிற்குத் தான் அழைத்துச் சென்றான்.

அங்கு சின்னஞ் சிறிய மழலைகள் மணலிலும்
சருக்கலிலும் ஊஞ்சளிலும் விளையாடிக் கொண்டிருக்க ...
வயதில் முதியவர்கள்
ஆங்காங்கே உள்ள ஸ்டோன்
பென்ஜில்  
அமர்ந்தபடியும் ,நடந்தபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஆதிரா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க சில நொடி அமைதிக்குப் பின் சக்தியே பேசத் தொடங்கினான்.

அங்க விளையாண்டுட்டு இருக்காங்களே சின்னச் சின்ன வாண்டுகள் அவங்கலாம் எப்படி இங்க வந்தவங்கத் தெரியுமா..,ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சூழ்நிலைலருந்து வந்துருக்காங்க.
குப்பைத் தொட்டிலருந்து, அப்றம் பெத்தவங்க விபத்துல இறந்து போய் ஆதரவயிழந்ததுனால , ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருந்தவங்க,அப்றம் வாலன்ட்டியராவே குழந்தைகள இங்க வந்து விட்டுட்டு போயிருக்காங்க இன்னும் இந்த மாதிரி நிறைய சுட்சுவேசன பேஸ் பன்னிட்டு வந்துருக்காங்க.

இவங்களுக்கெல்லாம் அம்மா அப்பானு யாரும் இல்ல.ஏன் அப்படினா என்னனுக் கூட தெரியாது. இந்த இல்லம் தான் அவங்க உலகம். இங்க இருக்கறவங்க தான் அவங்க சொந்தம் பந்தம் தாத்தா பாட்டி எல்லாமே.

அவங்க சிரிப்புல பொய் இல்ல. இந்த உலகத்துலயே இவங்கதான்  ரொம்ப சந்மோஷத்தை அனுபவிச்சிட்டு இருக்காங்க.

வயசுல முதிர்ச்சியடையாத குழந்தைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொருப் பக்கம் வயசுல முதிர்ச்சியடைந்த குழந்தைகள்.

தங்களோட குழந்தைகளை பல கனவுகளோட வளர்த்து ஆளாக்கி அவங்களுக்குனு ஒரு நல்ல குடும்பத்த அமைச்சி தந்தவங்க.

அந்தப் பிள்ளைகளே
கடைசில அவங்கல விரட்டி விட்டு, ஒரு சில பேர் பாரமா இருக்காங்கனு இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்க.

சொந்தம் பந்தம் அப்பா அம்மா னா என்னனே தெரியாதக் குழந்தைகளும்,சொந்தம் பந்தம் பத்தி தெரிஞ்சி வெறுத்தக் குழந்தைகளுமான (முதியவர்கள் ) இவங்க எல்லாரும் எல்லாரையும் விட ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க.

இதய திருடா Dove le storie prendono vita. Scoprilo ora