பகுதி-60

Start from the beginning
                                    

இங்க என்னடா பன்றிங்க...- நவீன்.

இல்ல மச்சி ராகுல் எப்பயும் உன் ரூம்ல வந்து விளையாடிகிட்டே இருப்பான் ... அதான் இப்பயும் வந்துட்டான்.

அவன் அங்கே சென்றதும் ராகுல்... மாமா ஆட்டு....தள் மாமா தள். என்றான். அவன் மழலை பேச்சை அறிந்தவன் ஊஞ்சலை ஆட்டிவிட்டான்... மாமா நியா... ங்க... நியா மாமா. நியா ங்க.. என ஊஞ்சலின் மற்றொருபுறத்தை காட்டினான்.
என்ன அந்த பக்கம் பார்த்து நிஷாவ கேட்கிறான்.. ராகுல அவ எப்படிபார்திருந்தா... அவளயே இவன் கேட்டுகிட்டிருக்கான்.... என தன் மனைவியாக போறவளை மெச்சிக்கொண்டிருந்தான்.
பின் அத்தய இப்பதான பார்த்துட்டு வந்தோம்... இன்னும் இரண்டு வாரத்துக்கு அப்பறம் இங்கயே வந்துருவாங்க என அவனிடம் கூறினான்.

பின் உள்ளெ சென்று தனது பெட்டில் அமர்ந்தவன்... ஏதோ யோசித்தவனாய் தனது பர்ஸை ஓபன் செய்தான்.

அதிலிருநத் சாவியை எடுத்து அங்கிருந்த கபோர்டுகளை திறந்து பார்த்தான்.
அவன் பர்சிலிருந்து ரியாவின் போட்டோவை மட்டும் எடுத்தவர்கள் மற்றதை அப்படியே வைத்தனர்.
அந்த கபோர்டின் சாவி கிடைக்காததால் அதை மட்டும் வேலை ஆட்கள் சுத்தம் செய்யவில்லை.
சாவிதான் இல்லயே ஏதாவது முக்கியமானது அதுல இருக்கபோகுது.. அத அப்படியே வச்சுடலாம் என பாட்டியும் விட்டுவிட்டார்.

கபோர்டும் ஓபன் ஆனது.....
அதில் ஒரு போன் இருந்தது... உள்ளே வந்த லோகேஷ்... ச்ச ரியா போன இங்க வச்சுட்டு போய்டா... அப்பறம் ஏன் டிரேஷ் பன்றப்ப இந்த ஏரியாவ காட்டாது.... என நினைத்தான்.பின் அதில் சில பைல்ஸ் இருந்தது அதை என்னவென்று பார்க்க ஒபன் செய்யும் வேலையில் அவன் பாட்டி அழைத்ததால் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிழம்பினர்.

அன்றிரவு  சுவிட்ச்சாப் ஆகியிருந்த அம்மொபைலை ஆன் செய்தான்.
ஆன் ஆனவுடன் அதிலிருந்த ஸ்கிரின் சேவரை கண்டு திடுக்கிட்டான்....

இது... இது நாம டெல்லில பார்த்த பொன்னு.... அவ போன் எப்படி இங்க... என மேலும்உள்ளே பார்க்க ஆரபித்தான்.

அதில் அவர்கள் எடுத்த போட்டோஸ்...பேம்லி போட்டோஸ் என அனைத்தும் இருந்தது...

என்ன இது ... எப்படி இப்படிலாம்.. ச்ச அன்னைக்கு அந்த பொன்னு என் பேர் சொன்னப்ப... நா எதும் கேட்காம அவசரத்துல வந்துட்டேன்... ஒரு வேல.. அவ என் சிஸ்டரா இருப்பாளோ... ஆனா இந்த போட்டோஸ் பார்த்தா அப்படி இல்ல... என்  லவ்வரா இருப்பாளோ... நெற்றியில குங்குமம் வச்சுருக்கா. அப்போ மேரேஜ் ஆகிடுக்கும்... என்கூட இவ்ளோ நெருக்கமா இருக்கா... அப்படினா அவ ... அவ ...என் வொய்ப்பா.... ஆனா வீட்ல இருக்கவங்க எதும் சொல்லலயே என்கிட்ட.. ஒருவேல எனக்கும் அவளுக்கும் டிவோர்ஸ் ஆகிடுக்குமோ... அப்பறம் அந்த குழந்த....
கடவுளே எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு... யாரு அந்த பொன்னு. . என்னோட இவ்ளோ நெருக்கமா இருக்கா ஒன்னும் புரியல! ... அவள பிடிச்சதும் எனக்குள்ள ஏன் ஒரு உணர்வு வந்தது....  அது ஏன்???  என தலையை பிடித்து கொண்டு பேட்டில் அமர்ந்தான்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now