அவளே  எழுந்துக் கொள்வாள் என சக்தி எழுப்பாமலே குளியறைக்குள் புகுந்துக் கொண்டான்.

தலையை துவட்டியபடி வெளியே வந்தவன் இன்னும் அவள் எழாமல் இருக்கவே ...

"தேவை இல்லாத வேலையெல்லாம் பன்னிட்டு எப்படி தூங்கறா "...என முணு முணுத்தவன் "ஆதிரா ஆதிரா"... என குரல் எழுப்ப அவள் எழுந்தபாடில்லை.
"ப்ச்.",,.. என புருவம் முடிச்சிட அவளின் தோளை உலுக்கி எழுப்புவதற்காக கையை வைத்தான். அவள் உடம்பு கொதிப்பதைப் போல் உணர்ந்தவன் தலையிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்க்க அனல் போல் கொதித்து.

"கடவுளே இவ்வளவு பீவர் ச்ச எப்பருந்துனு தெரியலையே"... என ஆதிராவின் தோளை உலுக்கி எழுப்பினான் . அவளினடமிருந்து ஒரு அசைவும் இல்லை.

பயத்துடன் "ஆ,,..ஆதிரா என்னாச்சு .ப்ளீஸ் எழுந்திரி எனக்கு பயமா இருக்கு "...என சொல்லும் போதே கண்கலங்கியது .

நேற்று அறையை சுத்தம் செய்ததால் மதிய உணவை மறந்தாள். இரவிலும் எதுவும் உண்ணவில்லை. உறங்கும் முன் தனக்கு ஜுரம் அடிப்பதை உணர்ந்தவள் தான் இருந்தநிலையில் மாத்திரை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.
இரு வேளை உண்ணாதது,மற்றும் ஜுரத்தின் காரணமாக மயங்கியிருந்தாள்.சக்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையால் இரவு முழுவதும் அவள் அனத்தியது அவன் காதில் விழவில்லை.

பதறியவன் போனை எடுத்து விஷயத்தைக் கூறி வருணை காரை எடுத்து வரச்சொன்னான்.

சக்தி அழைத்த ஐந்து  நிமிடத்தில் வருண் வந்து சேர்ந்தான்.

"என்னாச்சுடா அவங்க மயங்கி கிடக்கறது கூட தெரியாம என்னப் பன்னிட்டு இருந்த"... என கண்டிப்புடன் வருண் வினவ.

சக்தி நடந்ததை சுருக்கமாகச் சொல்லி அவனே தொடரந்தான்

"எல்லாம் என்னாலதான்டா"... என்றான் கலங்கியக் கண்களோடு.

"சரி வா பேசி டைம் வேஸ்ட் பன்னாமல் அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேர்ப்போம் "...என்று வருண் கூறிவிட்டு கார் கதவினை திறந்து வைக்க சக்தி ஆதிராவை கையில் அள்ளிக் கொண்டு காரினுள் கிடத்தியவன் பின் சீட்டில் தானும் அமர்ந்துக் கொண்டு அவள் தலையை தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டான்.
அவள்  நிலையை பார்க்க பார்க்க அவனுக்கு அழுகையாக வந்தது.
மின்னல் வேகத்தில் கார் ஆதிரா பணிபுரியும் மருத்தவமனை முன் நின்றது.அருகில் உள்ள மருத்துவமனை அது தான்.

இதய திருடா Onde as histórias ganham vida. Descobre agora