இப்படிக்கு உன் அன்புள்ள அத்தை
செல்வி

கடிதத்தை மடித்தவளின் கண்களில் நீர் வழிந்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டவள் இந்த ஆண்டவனுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருனு தெரியாது சாகற வயசா அவங்களுக்கு என நினைத்துக் கொண்டவள் அவர் குறிப்பிட்டபடியே அந்த துணிப்பையை எடுத்தாள் அதில் நகையும் கண்ணை பறிக்கும் அளவுக்கு அழகான மாம்பழம் நிற மஞ்சள் பட்டுப்புடவையும் இருத்தது.அனைத்தையும் பையினுள் வைத்தவள் அந்த கடிதத்தையும் அதனுள் வைத்து பீரோவினுள் வைத்து விட்டால். ஏனோ அதையெல்லாம் அவளுக்கென்று சொந்தம் கொண்டாட மனம் விரும்பவில்லை.அவர் கூறியது மருமகளுக்கென்றே.

தான் நிரந்தரமல்ல என தோன்றியது காரணம் அவர்களுக்கு திருமணம் நடந்த முறை, அன்று ரேஷ்மா கூறியதும் தான் .சக்தியின் மனதில் ரேஷ்மா இருந்தாள் அவளுக்குத் தானே இதெல்லாம் சொந்தம் என கருதினால்.

அந்த அறையிலிருந்து வெளியேறியவள் சக்தி மாடிப்படி ஏறிச்சென்றது நினைவு வர மொட்டை மாடிக்குச் சென்றால்.
அங்கு சக்தி மொட்டை மாடியின் சுற்றுச்சுவரில் கையிரண்டையும் வைத்து வானத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி  நின்றுக்கொண்டிருந்தது.சக்தி எந்த நிலையில் இருப்பான் என ஆதிராவால் ஊகிக்க முடிந்திருந்தது.மெல்ல சென்று அவன் அருகில் நின்றாள். அவள் வந்ததுக் கூட தெரியாமல் சக்தி அப்படியே நின்றுக் கொண்டிருந்தான்.இப்போது அவனிடம் என்ன பேசுவது என்ன சொல்லி சமாதானம் செய்வது என புரியாமல் நின்றுக்கொண்டிருந்தவள் அப்போது தான் கவனித்தாள் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை. ஏனோ அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முனியவில்லை. மனம் பாரமாக இருந்தது.அவனை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் எனத்தோன்றியது.

அவன் கரத்தின் மீது தன் கரத்தினை வைத்து அழுத்தினால் சக்தி அப்போது தான் மீண்டு வந்தான் ஆதிராவின் புறம் திரும்பினான். கண்கள் அழுது சிவந்து கண்ணங்கள் வீங்கியிருந்ததை கவனித்தாள்.மௌனத்தை உடைத்து ஆதிரா பேச ஆரம்பித்தாள்.

எந்த அம்மாவுக்கும் தன்னோட பிள்ளை அழுதா பிடிக்காது ரொம்ப கஷ்டமாதான் இருக்கும். நீ அம்மாவ கஷ்டப்படுத்தனும்னு நினைக்கிறியா சக்தி என்றாள் லேசாக.

சக்தி வெகு விரைவாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்தினான்.

அந்த தருணத்தில் ஆதிரா சக்தியை குழந்தையாகவே பார்த்தாள்.
ஒரு வித தாய்மை உணர்வுடன்
அவங்க உடல் மட்டும் தான் இங்க இல்ல மனதளவில் இங்கதான் இருக்காங்க.இதோ இப்பக் கூட இங்கதான் இருப்பாங்க.நீ அழறத பார்த்து அவங்களும் அழுதுட்டுதான் இருப்பாங்க.அவங்க சந்தோஷமெல்லாம் உன்னோட சந்தோஷம், சிரிப்புல மட்டும் தான் நீ அழறதுல இல்ல. இறப்புங்கறது உடல்ல இருந்து உயிர் பிரியறது மட்டும் தான் அந்த உயிர் எங்கையும் போகாது அவங்களுக்கு புடிச்சவங்கள சுத்தி தான் இருக்கும். நீ சந்தோஷமா இருக்கும் போது அம்மாவோட மனசு உன்ன சுத்தி வரத உணருவ பாரு என்று அவன் நோகாமல் பேசி முடித்தாள்.

அவளின் வார்த்தைகளெல்லாம் அவன் மனதில் பதிந்தாலும் மௌனமாகவே இருந்தான்.

அவன் முக அமைதியை கண்டவள் சற்று நிம்மதி அடைந்தாள்.இந்த தருணத்திலிருந்து அவனுக்கு உருதுணையாக இருக்க விரும்பினாள் ஒரு தோழியாக.

அவனை கீழே அறைக்கு அழைத்து வந்தவள்  பெட்டில்  படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டு அவன் தலையை மெல்ல வருடிவிட்டவள் எதையும் யோசிக்காமல் தூங்கு என கூறி பின் சோபாவில் படுத்துக்கொண்டாள்.

தூக்கமே வராமல் புரண்டு படுத்தவளுக்கு செல்வியின் கடிதமும் அவரது நினைவும் வந்தது.ஏனோ அவள் மனம் அவரை ஒரு முறையாவது பார்க்கமாட்டோமா என ஏங்கியது.

அவர் எழுதிய கடிதத்தை படித்த எனக்கே அவரை பார்க்கவேண்டும் என தோனுதே சின்ன வயசுலருந்து அவர் அருகில் இருந்தவனுக்கு எப்படி இருக்கும். இவனை நாம் தான் தேற்ற வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொண்டாள்.

இதய திருடா Where stories live. Discover now