"கடவுளே இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே.  இவங்ககிட்ட என்னத்த சொல்றது. கடவுளே காப்பாத்து"... என மனதில்  வேண்டிக் கொண்டிருக்க அதை களைக்கும் விதமாக ..,

"ஹலோ ஆதிரா என்ன பகல் கனவா. நான் எப்படி மூச்சு விடாம பேசுனேன். நீ என்னடான்னா பேசவேமாட்ற. நீ சொல்லாம இங்கிருந்து போக முடியாது "...என நிஷா அவளை பொய்யாக மிரட்ட.

"ஆங் அதெல்லாம் ஒன்னுமில்ல. நாங்க"... என ஆரம்பிக்க ஆதிராவின் மொபைல் ரிங்கானது.

"சாரி இம்பார்டன் கால் பிரண்டு தான் .பேசிட்டு வரேன் "...என அவர்களிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என விடைபெற்றுக்கொள்ள அவர்களும் மணமக்களுக்கு பரிசு  கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு  கிளம்பினர்.

ஆதிராவிற்கு படபடவெனப் பேசும் நிஷாவைப் பிடித்திருந்தது.அவள் பேச்சும் பாவனையும் பாரதி செய்வதுப் போலவே இருந்தது.

"ஹலோ....பாரதி எப்படி இருக்க"...,

"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க"...

"ம்ம்ம் இருக்கேன் பாரதி"...என்றவளின் குரல் கம்மியது.

"ம்ச்.... என்னாச்சு ஒரு மாதிரியா  பேசற.மறுபடியும் எதாவது ப்ராப்ளமா"....

"ம்ஹூம் இல்ல மனசுக்கு ஒரு மாதிரியாவே இருக்கு"... என ஆதிரா கண் கலங்க.,.

"ஆதி...ப்ளீஸ் நடந்தத மறந்துரு. எல்லாம் சரியாகிடும். உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குடி"...

"என்னால முடியல பாரு.அம்மா, அப்பாவ பார்க்கனும் போல இருக்கு. அவங்க என்ன ஏத்துக்கவே மாட்டாங்களா"... என கேட்கும் பொழுதே விழியின் ஓரம் கண்ணீர் வடிய அதை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.

"இப்ப நீ போய் அப்பா, அம்மாவ பார்த்தா திட்டுவாங்க. அப்றம் உனக்குதான் கஷ்டம்.கொஞ்சநாள் பொறுமையா இரு.கண்டிப்பா அவங்க புரிஞ்சிப்பாங்க "...

"ம்ம்ம்.,.... சரிடி."...

"ம்ம்ம்..,குட். இப்ப எங்க இருக்க இன்னும் ஹாஸ்பிட்டல்லதான் இருக்கியா"...

இதய திருடா Where stories live. Discover now