"டேய் ஏன்டா அப்படி சொன்ன. இது என்ன லவ் மேரேஜ்ஜா உனக்கு எதாச்சும் அறிவிருக்கா ஏன்டா இப்டி பன்ற"... என மீண்டும் எறிந்து விழுந்தான்.

"சும்மா என்னத் திட்டாத. வேற என்ன சொல்ல சொல்ற இந்த மேரேஜ் எப்படி நடந்துச்சுனு அப்படியே எல்லார்க்கிட்டையும் சொல்ல சொல்றியா?"..,

அவன் கூறுவதும் சரி எனப் பட அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்து  கொண்டான்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும் என்ன லீவ் சொல்ல சொல்லிட்டு நீ ஏன் இப்படி திடீர்னு வந்து நிக்கிற?"...என்ற வருணிடம்
காலையில் நடந்த அனைத்தையும்  கூறியவன்.

"இப்பதான் டா எனக்கு நிம்மதியா இருக்கு. நான் பயந்துட்டே இருந்தேன். அவ காலைல அப்படி பேசுனோன நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா"... என்றான் தன முழு சந்தோஷத்தையும் முகத்தில் காண்பித்தபடி.

தன் நண்பனின் சந்தோஷத்தில் மகிழ்ச்சியுற்றவன். சட்டென..,

"எனக்கென்னவோ நான் ஆபிஸ்ல சொன்னது இப்ப உண்மையோனு தோனுது"...

"என்ன?",.,.என்றவன் கேள்வியாய் வருணைப் பார்க்க,..

"லவ் மேரேஜ்னு சொன்னேல அத சொன்னேன்."...

"ம்ச்., என்ன உளற".,,

"ம்ம்ம்,,. நீ இவ்ளோ ஹேப்பியா இருந்து பார்த்தது இல்ல அதான் கேட்டேன். உண்மைய சொல்லு நீ ஆதிராவ விரும்பிதான கல்யாணம் பன்ன? "... என்றான் ஆம் என்றபதிலை எதிர்ப்பார்த்து.

"நான் சந்தோஷப்பட்டதுக்கு காரணம் ஆதிரா லைப்ல நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அப்படியிருக்றப்ப என்னால அவ எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டேனு சொன்னா அதனால தான். மத்தபடி  நீ நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல",..

சக்தியின் பதிலில் வருண் சற்று ஏமாந்துத்தான் போனான்."ஆனாலும் உன் லைப்ல உனக்குனு ஒரு மனைவிய குடுத்த ஆண்டவனுக்கு உன் மனசுல காதல வர வைக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்லை"... என மனதைத் தேற்றிக்கொண்டான்.

ஆம் சக்தி கூறியதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. சூழ்நிலையின் காரணமாக ஆதிராவை மணந்தானே தவிர ஆதிராவின் மேல் காதல் என எதுவும் இல்லை.
.
.
.
.
.
.
மாலை வீடு திரும்பியவன் கையில் இருந்த பைலை சோபாவில் அமர்ந்திருந்த ஆதிராவிடம் நீட்டினான் அதை வாங்காமல் குழப்பத்துடன் பார்த்தவளை ,.."வாங்கி பிரித்துப் பார் "...என கூறி தானும் எதிரில் உள்ள சோபாவில் அமரந்துக் கொண்டான்.

அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள் திகைப்பில் சக்தியிடம் "இது என்னோட சர்டீபிகேட்ஸ்(certificates) .இது எப்படி தந்தாங்க. அவங்க  திட்டல?"... என ஆச்சர்யத்துடன் வினவினாள்.

"இல்லை கொஞ்சம் கோவப்பட்டாங்க அவ்ளோ தான். இன்னும் கொஞ்ச நாள்ல புரிஞ்சிப்பாங்க ",..என அங்கு நடந்ததை மறைத்து பொய்க்கூறினான். தெரிந்தால் வருந்துவாள் என்பதற்க்காக. மேலும் அவளை எதுவும் கேட்கவிடாமல் "எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் காபி கிடைக்குமா?"...

"ம்ம்ம் ஒரு 5 மினிட்ஸ் கொண்டுவறேன் "...என்றவள் பைலை கபோடில் வைத்துவிட்டு கிட்சனுள் நுழைந்துக் கொண்டாள்.

ஆபிஸ் முடிந்து வருணிடம் ஆதிராவின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நடந்ததை கூறி மன்னிப்பு கேட்கப்போவதாகச் சொன்னான்.  வருண் தானும் உடன் வருவதாக கிளம்ப "வேண்டாம் '...என தடுத்துவிட்டு சக்தி மட்டும் சென்றிருந்தான்.அவர்களது கோவம்  கொஞ்சமாவது குறைந்திருக்கும் என நம்பினான்.

அங்கோ ஆதிராவின் தாய்  சக்தியைக் கண்டவுடன் அவன் முன் அவள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் எரித்து விட்டு சர்ட்டிபிகேட்ஸை சக்தியின் முகத்தில் தூக்கி எரிந்தார்.அவன் சொல்லவருவதை அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.
இது தெரிந்தால் வருந்துவாள் என்பதால் தான் சக்தி நடந்ததை மறைத்திருந்தான்.

இதய திருடா Kde žijí příběhy. Začni objevovat