"இந்த கபோட்ல உனக்கு ட்ரஸ் இருக்கு எடுத்துக்கோ ஃபிரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம் "...என அவள் பதிலை எதிர்ப்பாராமல் வெளியேறினான்.

அவன் போன திசையைப் பார்த்திருந்தவள் காபியை குடுத்துவிட்டு குளியல் அறையில் புகுந்துக்கொண்டாள்.

சாப்பிட மறுத்தவளை கெஞ்சி சாப்பிட வைத்தான் .

ஆதிரா அந்த அறையிலே அடைந்துக்கிடந்தாள்.

இதற்க்கிடையில் வருண் சக்திக்கு கால் செய்து விசாரித்தப்படிதான் இருந்தான்.

சக்தி நியூஸ் சேனலைத் திருப்பிக் கொண்டிருக்க காலிங் பெல்லின் ஓசைக்கேட்டு கதவைத்திறக்க...

அங்கு 24 வயது மதிக்கத்தக்க. ஒருப் பெண் நின்றிருந்தாள்.

"நீங்க சக்தியா?".,..

"ம்ம்ம் ஆமா."...

"நான் பாரதி.  ஆதிராவோட பிரண்டு"...

"ஓ உள்ள வாங்க "...என்ற சக்தி பாரதிக்கு வழிவிட்டபடி ஒதுங்கி நின்றவன் பின் ஆதிரா இருக்கும் அறையை காட்டிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்துக்கொண்டான்.

ஆம் ஆதிராவும் சக்தியும் ஆதிராவின் வீட்டிற்குச் சென்ற போது பாரதி அங்கு இல்லை. அவள் அங்கிருந்திருந்தால் ஆதிக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

ஆதிராவின் வீட்டிற்குச்  சென்றவள் என்ன நடந்தது என அறிந்துக் கொண்டாள் ஆனால் சக்தியின் முகவரி அறியாதமையால் அழைந்துத் திரிந்து கடைசியில் இங்கு வந்துச் சேர்ந்தாள்.

பாரதி அறையினுள் நுழைய தாயைக் கண்ட சேயைப்போல் ஆதிரா பாரதியை ஓடி வந்து அனைத்தபடி வெடித்து அழுதாள். பாரதி  அவள் முதுகில் தடவிக்கொடுத்தபடி ஆறுதல் படித்துக்கொண்டிருந்தாள்.

"நீயாச்சும் என்ன நம்புறியா பாரதி,"...என்ற ஆதிராவின் மேல் பாரதிக்கு கோவம் வந்தது.

"அப்படியே அடிச்சனா உன்ன நம்பாம வேற யார நம்ப போறேன் .நீ என் பெஸ்ட்டி டி உன்னப் பத்தி எனக்கு தெரியாதா என்ன .நீ எந்த தப்பும் பன்னிருக்கமாட்டனு எனக்குத் தெரியும். என்னோட  கவலையெல்லாம் உனக்கு எதோ ஆபத்து வந்துருக்குமோனு தான். இப்ப உன்ன பார்த்தவுடனே தான் எனக்கு உயிரே வந்துச்சு."...என்றாள்.

இதய திருடா Where stories live. Discover now