சற்று நேரத்தில் வருண் ஆதிராவிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்திருந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ்டா".,.

"சீன் போடாதடா. நமக்குள்ள எதுக்குடா தேங்க்ஸ்லாம் போ போய் இதெல்லாம் அவங்கக்கிட்ட குடு"...

"ம்ம்ம்,,... சரி வா வந்து நீயும் சாப்பி்டு"...

"வேண்டா மச்சி டைம் ஆச்சி நான் ராஜேஷ்ஷ பார்க்கப் போனும் அவன் பிராஜக்ட் விஷயமா பார்க்கனும்னு சொல்லிருந்தான். பாய் டா."...

"ம்ம்ம்,.... வருண் அப்றம் நான் கொஞ்ச நாளைக்கு ஆபிஸ்
வரல ஆதிராவ தனியா விட பயமா இருக்கு எதாது பன்னிப்பாளோனு .அதனால ஆபிஸ்ல எதாவது சொல்லி சமாளி ம்ம்ம்."...என்றிட அதற்கு

"ம் ஒகே மச்சி".. .என்றவன் விடைப்பெற்றுக் கொண்டான்.

கையில் சாப்பாடுடன் உள்ளே நுழைந்தவன் தட்டை டேபுளில் வைத்துவிட்டு ஆதராவின் புறம் திரும்பினான் அங்கோ அவள் குழந்தைப் போல் சுருண்டு படுத்திருந்தாள். அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தது. கண்ணீர் வழிந்தோடியத் தடம் அவள் கன்னங்களில் இருந்தது.

"ஆதிரா ஆதிரா"... என்றழைக்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாள் சக்தியின் குரல் அவள் செவியினுள் நுழையவில்லை.
தட்டி எழுப்புவதற்க்காக கையை அருகில் கொண்டுச் சென்றவன் பிறகு ஏதோ நினைவு வந்தவனாய் வெடுக்கென கையை பின் எடுத்துக் கொண்டான்.

"ஐயோ இப்பதான் அமைதியா தூங்குறா எழுப்பிவிடப் போய் மறுபடியும் அழ ஆரம்பிச்சிடப் போறா. ஆனா சாப்பிட வைக்கனுமே என்ன பன்றது"... என சற்று நேரம் சோபாவில் அமர்ந்து யோசித்தவன் இருந்தக்களைப்பில் தன்னையும் அறியாமல் தூங்கியும் போனான்..
.
.
.

விடிந்து எழுந்தவன் "கடவுளே தூங்கிட்டனா ச்ச எப்படி ம்ம்ம்.." திரும்பி ஆதிராவைப் பார்க்க அவ நித்திரா தேவியின் பிடியில் இருந்தாள்.

காபி கப்புடன் உள்ளே நுழைய ஆதிரா பெட்டில் அமர்ந்திருந்தாள் அருகில் சென்று கப்பை அவளிடம் நீட்ட "வேண்டாம் "...என்றவள் அவன் வற்புறுத்தளினால் ஒரு வித தயக்கத்துடன் கப்பை வாங்கிக் கொண்டாள்.

இதய திருடா Where stories live. Discover now