"அய்யா கண்ண விழித்துடா." கதிர் என் கண் முன்னாடி வந்து நின்னான்.

"என்ன மா வலி எப்படி இருக்கு?" பாசமாக கேட்பது போல நடிச்சான். "என்ன டி உன் அப்பாகிட்ட சொல்ல ஓடுரியா? அதுக்கு நீ உயிரோட இருந்தா தான முடியும்?"

"கதிர் என்ன விட்டு விடு."

"உன்ன விடுவதா? முடியாது. உன் அப்பா என்ன பாட்னரா ஏத்துக்கிட்டானே தவிற. முதல் மறியாத எனக்கு கிடைக்கள. அது வேணும்னா உன்ன கல்யாணம் செய்யனும். அப்போ மொத்த சொத்தும் என் போர்க்கு வந்துடும். இது தான் என் திட்டம். ஆனா இப்போ உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி. அதனால என் திட்டத்த மாத்திக்கிட்டேன். உன்ன கொன்றுவிட்டு உன் தங்கையை திருமணம் செய்துக்கொள்ள." என் உயிரே நின்றுவிட்டது. இத தடுக்கனும் அதனால நான் இங்க இருந்து தப்பிக்கனும்.

என் இரண்டு கையிலயும் மண்ண அள்ளி அவங்க முகத்துல போட்டேன். அங்க இருந்து ஓடினேன். ஆனா என் தலையில அடி பட்டு இருந்தாள என்னால ஓட முடியல. திரும்பவும் என் தலையில கம்பியால கதிர் வேகமா அடிச்சான். தல சுத்தி கீழ விழுந்தேன். எனக்கு கண் சரியா தெரியல.

"தப்பிக்கவா பாக்குர? " கம்பியால பலமா என் கால் எழும்பு உடையிர அலவுக்கு கதிர் அடிச்சான். வலி தாங்க முடியாம கத்தினேன். "கத்துறத நிருத்து" அப்படினு சொல்லி என் முகத்துல அடிச்சான். உயிர மட்டும் பிடிச்சிட்டு நான் பொனமா இருந்த. செத்த பாம்ப அடிக்கிற மாதிரி என்ன அடிசிட்டேய் இருந்தாங்க. கடைசியா என் மேல எண்ணை ஊத்தி என்ன உயிரோட எறிச்சாங்க. நான் துடி துடித்து செத்தன்.

அடுத்த நாள்.
          காலை என் அப்பா வீட்டுக்கு வந்தார்.

"ஹாசினி எங்க மா இருக்க?" என் அப்பா என்ன கூப்டார் ஆனா நான் ஆவர் பக்கத்தில் இருந்தும். அவரால என்ன பார்க்க முடியல. கதிர் வந்தான்.

"ஆங்கில் ஹாசினி." கண்களை துடைப்பது போல் நடித்தான்.

"என்ன ஆச்சி." என் அப்பா பதறினார்.

ஹாசினிحيث تعيش القصص. اكتشف الآن