நீர் வீழ்ச்சி

3.7K 171 16
                                    

ஹம்சினி கண் விழித்தாள்..."இந்த தண்ணீய குடி"...என்று சிவா அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்

அவள் வாங்கி தண்ணீரை குடித்தாள்...

"என்ன ஆச்சு ஹம்சினி???என்று ஹாரூஷ் கேட்டான்.

"ஹாரூஷ் இந்த வீட்ல நம்மல தவிர வேர யாரோ இருக்காங்க"...என்று அவள் பதில் கூறினால்.

"யாரு???என்று அனைவரும் குழப்பத்துடன் கேட்டார்கள்.

"எனக்கு தெரியல்ல...ஒரு கை மட்டும்தான் நான் பார்த்தேன்"...என்று பதட்டமாக அவள் சொன்னால்.

"மாலதி இவ நம்மகிட்ட விளையாடுராளோ??? என்று சிவா அவள் காதில் மெல்ல கேட்டான்.

"தெரியலயே...,சிவா"

"சரி வா சாப்பிட போகலாம்"...என்று அவள் கூறியதை சீரியஸ் ஆக எடுத்துகொள்ளாமல் ஹாரூஷ் கூறினான்.

"என்ன ஹாரூஷ் நான் சீரியஸ்யா சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சாப்பிட கூப்பிடற???"என்று அவள் கோபமாக கேட்டால்

"இப்போதான் ஹாரூஷ் சரியா சொல்லி இருக்கான்"...என்று சிவா கூற

ஹாரூஷ் திரும்பி சிவாவை ஒரு பார்வை பார்த்தான். சிவா அமைதி ஆனான்...

"வா ஹம்சினி போகலாம்"...என்று மீண்டும் அவளை அழைத்தான் ஹாரூஷ்.

"நீங்க யாரும் என்ன நம்ப மாட்டிங்களா??? என்று பாவமாக திரும்பவும் அவள் கேட்டால்

"நாங்க எல்லோரும் உன்னை நம்புகிறோம்,இப்போ சாப்பிடலாம்...வா" என்று ஹாரூஷ் அழைத்தான்

அவள் தயக்கத்தோடு ஒத்துக்கொண்டாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

"சிவா நீயும் ஹாரூஷ்வும் மேல இருக்க முதல் ரூம்ல தங்கிக்கோங்க"...என்று ஹம்சி கூற

"ஐய் ஐயோ முதல் ரூம் வேண்டாம் பா,நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல"...என்று கூறி சிவா கண்களில் பயத்தை வெளிப்படுத்தினான்.

ஹாசினிOnde histórias criam vida. Descubra agora