அக்கினிக் குஞ்சு

267 9 5
                                    

அன்பான தோழர் தோழியர்க்கு,

தங்கள் வரவேற்பு கண்டு உவகை கொள்கிறேன்... என் முண்டாசு கவிஞர் பாரதிக்கும் அவர் கவிதைகளுக்கும் இன்றும் பலர் ரசிகர் என்று காணும் போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...இதை இன்னும் தொடர வேண்டும் என பல நாட்களாக எண்ணினேன் .இப்பொழுது தொடர்கின்றேன்...

என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவி இது...(முதன் முதலாக நானும் என் தம்பியும் மனப்பாடம் செய்த கவி)

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

பாரதியார் கவிதைகள்Where stories live. Discover now