3

2.6K 93 45
                                    


காதல் பிரிவின் வலியை விட மிகவும் கொடுமையான வலி ஒரு நட்பின் பிரிவு. 


அந்த பிரிவின் வலியில் நாங்களும் தள்ளப்பட்டோம். வகுப்பில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சண்டை வந்தது. சண்டை வந்ததோ வகுப்பில் இறுவருக்கு மட்டும். ஆனால் அதன் பின்விளைவு அனைவரையும் பாதித்தது. அதற்கு பின் என் நண்பன் பாலா, பெண்களிடம் பேசவே கூடாது, அதையும் மீறி பேசினால் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லி விடுவேன்  என்று எல்லாரிடமும் சொல்லி விட்டான். சிறு பிள்ளைகளாக இருந்ததால் பயந்து கொண்டு நாங்களும் பேசவில்லை. இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தோம், அதற்கு மேல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 

அவள், பார்க்கும் போதெல்லாம் சிரித்து விட்டு செல்வாள். யாருக்கும் தெரியாமல் பேச ஆரமித்தோம். இடைவேளையில் சிற்றுண்டிகளை பகிர்ந்து கொண்டோம். ஒரு நாள், இடைவேளையில் நாங்கள் பேசி முடித்ததும் அவள் சென்று விட்டாள். பல நாள் கழித்து பேசிய ஆர்வத்திலும், அவள் புன்னகையின் மயக்கத்திலும், உணவகம் செல்வதிற்கு பதிலாக, நான் அவளை பின்தொடர்ந்து பெண்கள் பொது அறைக்குள்ளே சென்று விட்டேன். உள்ளே சென்றதும் தான் என் மயக்கம் தெளிந்தது. என் அதிஷ்டம் யாரும் என்னை பார்க்கவில்லை. சட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டேன். என் நண்பர்களுக்குக் கூட இதைப்பற்றி சொல்லவே இல்லை. அமைதியாக வீட்டுக்கு சென்று விட்டேன்.

திருட்டுத் தனமாக பேசியதிலும் ஒரு தனி சுகம் இருந்தது. ஆனால் எவ்வளவு நாள் தான் இப்படி பேசுவது? பொறுக்க முடியாமல், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று அனைவரின் முன்பாகவும் அவளிடம் பேசினேன். நான் பேசுவதை பார்த்து விட்டு என் நண்பர்களும் அவளிடம் பேச ஆரமித்தார்கள். அவளும் எதற்கும் அஞ்சாமல் பேசினாள். எல்லாம் பேசிய பின்னர் தான் தெரிந்தது, எல்லோரும் அவளிடம் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று. இதிலிருந்தே தெரிந்து விட்டது எங்கள் நட்பின் ஆழம். யாராலும் பிரிக்க முடியாது என்று புரிந்து விட்டது. 

முதல் காதல் #YourStoryIndiaWhere stories live. Discover now