முத்தம்

Start from the beginning
                                    

"யரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு நான் கீழே சென்றேன். பின் வாசல் கதவை யரோ தட்டினார்கள். நான் சென்று கதவை திறந்தேன். அங்கு கதிர் நின்றுக்கொண்டு இருந்தார்."

"நடு இராத்திரியில் காட்டுக்குள் அவன் என்ன செய்கிறான்" என்று சிவா கேட்டான்.

"சிவா அமைதியாக இரு அவள் சொல்லட்டும்" என்று பூஜா கூறினால்.

"அவரை உள்ளே அழைத்து கதவை சாத்தினேன். பின் நான் திரும்பியதும்"..... என்று ஹம்சி தயங்கினாள் அவள் ஹாரூஷ்யை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். அவள் உள்ளத்தில் ஒரு பயம் தோன்றியது. "நான் திரும்பியதும் கதிர் என்னை நோக்கி நடந்தார். நான் பின்னாள் நடந்தேன் அப்போது" என்று தயங்கினாள் பின் தலை குனிந்தாள். அனைவரும் ஹாரூஷ்யை நிமிர்ந்து பார்த்தார்கள். அவன் பல்லை கடித்துக்கொண்டு முகத்தை திருப்பினான்.

"அப்போ என்ன நடந்தது ஹம்சி " என்று தயக்கத்துடன் மாலதி கேட்டாள்.

"அப்போது கதிர் என்னை நெருங்கி வர நான் பயத்தில் பின்னாள் நடந்தேன். அப்போது அந்த எரிந்த உருவம் அவர் பின்னாள் தோன்றியது" என்று அவள் கூறியது அனைவரின் முகமும் பயத்தில் மாறியது.

"அதுக்கு பிறகு என்ன நடந்தது" என்று பூஜா கேட்டாள்.

"அந்த உருவம் என்னை தொட கையை நீட்டியது உடனே நான் கத்திவிட்டேன்" என்று அவள் கூறினாள். ஹாரூஷ்யின் முகம் மலர்ந்தது.

"எனக்கு பயமாக உள்ளது" என்று மாலதி கூறினாள்.

"எனக்கும் "என்று சிவா கூறினான். பூஜா அவனை பார்த்து முறைத்தாள். சிவா தலை குனிந்தான்.

"எனக்கு சத்தியமாக பயமா இருக்கு" என்று மாலதி கூறினான்.

"மாலதி பயப்படாத" என்று ஹாரூஷ் கூறினான்.

"எப்படி ஹாரூஷ் ஒவ்வொறு நாலும் எனக்கு பயம் அதிகமாகுது. உங்களுக்கு புரியலையா இப்போ எல்லாம் அந்த உருவம் நம்ம கண்களுக்கு அதிகமாக தெரியுது. இது நல்லதுக்கு என்று எனக்கு தோன்றவில்லை" என்று மாலதி கூறினான்.

ஹாசினிWhere stories live. Discover now