கழுத்து சங்கிலி

Start from the beginning
                                    

"ஹாரூஷ் கவலை படாதே ஹம்சி கிட்ட விசாரிக்கலாம்" என்று சிவா கூறினான்.

"சிவா இதுல எதோ மர்மம் இருக்கு. ஹம்சி கண்கள்ள என்ன மேல அவளுக்கு இருந்த காதல நான் பார்த்து இருக்கேன். அவ எதோ பிரச்சினையில் இருக்கா." என்று ஹாரூஷ் கூறினான்.

"அத ஏன் நம்மிடம் இருந்து மறைக்கிறாள்??? என்று மாலதி கேட்டாள்.

"அது தான் தெரியல" என்று சிவா கூறினான்.

"சிவா இப்போ ஹம்சி எங்க???

"அவ கதிர் கூட பின்னாடி போனதை நான் பார்த்தேன்" என்று சிவா கூறினான்.

"வாங்க அவங்க கிட்ட போகலாம்" என்று ஹாரூஷ் கூறினான்.

"டே அது நல்ல இருக்காது டா" என்று சிவா கூறினான்.

"டேய் அவ என் ஹம்சி டா" என்று பல்லை கடித்துக்கொண்டு ஹாரூஷ் கூறினான்.

"சரி வாடா போகலாம்" என்று சிவா கூற. அனைவரும் பின் வாசல் வழியாக ஹம்சி இடம் சென்றனர்.

இவர்கள் வருவதை கண்ட கதிர். தொல்லை இங்கும் வந்து விட்டது என்று மனதிற்குள் எண்ணினான்.

"ஹம்சி எங்கு செல்கிறாய்??? என்று சிவா கேட்டான்.

"இவர் பல்லவி இறந்த இடத்தை காண வேண்டும் என்று கூறினார். அதனால் அவரை அங்கு அழைத்து செல்கிறேன்." என்று ஹம்சி பதில் அளித்தாள்.

"அந்த இடத்தை பார்த்து நீங்க என்ன செய்ய போகிறீர்கள்??? நீ என்ன போலிசா??? என்று சிவா நக்கலாக கேட்டான்.

"போலிஸ் எல்லாம் இல்ல ஒரு ஆர்வத்துலதான் அந்த இடத்திற்கு செல்கிறேன்" என்று கதிர் கூறினான்.

"அட இதோ பார் டா ஒரு ஆர்வத்துல போராராம். உண்மையா சொல்லுங்க நீங்க தற்கொலைக்கு இடம் பார்க்கலையே" என்று சிவா நக்கலாக கூறினான். அதனால் சட்டென்று கதிர் கோவப்பட்டான்.

"ஹம்சி என்கிட்ட இது போல நடந்துக்க வேண்டாம் என்று சொல்" என்று கதிர் கூறினான். ஹம்சி சிவாவை அமைதியாக பார்த்தாள். எதுவும் கூறாமல் கதிரை அழைத்துக்கொண்டு நடந்தாள். ஹாரூஷ் சட்டென்று சிவாவின் கையை பிடித்து நிருத்தினான்.

ஹாசினிWhere stories live. Discover now