கரடி பொம்மை

Start from the beginning
                                    

"நான் வந்த பாதையில் அவள் எதிரே வரவில்லை. அவள் இங்கும் இல்லை அப்படி என்றால் அவள் எதிர் திசையில் காட்டிற்குள் சென்று இருக்க வேண்டும்." ஹாரூஷ் ஹம்சியை பின் தொடர்ந்தான்.

"ஹாரூஷ், ஹாரூஷ் எங்க இருக்க" என்று கேட்டுக்கொண்டே ஹம்சி நடந்தாள். அவள் ஒரு ஆறு முன் சென்று நின்றாள். நல்லிரவு இருட்டில் ஆற்றில் நீர் ராட்சச வெள்ளம் ஓடுவது போல் அவள் கண்களுக்கு புலப்பட்டது. ஆற்றுக்குள் எட்டி பார்த்தாள். அவள் பிண்பத்தை கண்டாள். சட்டென்று அவள் பின்னால் இருந்து யாரோ எட்டி பார்ப்பதை கண்டு திடுக்கிட்டு திரும்பினாள். எரிந்து போன அந்த உருவம் அவள் முன் நின்றுக்கொண்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டு தடுமாறி ஆற்றில் விழுந்தாள். அந்த உருவம் கையை நீட்டியது. ஹம்சி அதை கவனித்துக்கொண்டே ஆற்றுக்குள் விழுந்தாள். சட்டென்று அந்த உருவம் மறைந்ததும்.

அங்கு ஓடி வந்த ஹாரூஷ். ஹம்சி ஹம்சி என்று கத்தினான். ஆற்றுக்குள் மூழ்கிக்கொண்டு இருந்த ஹம்சியின் காதில் ஹாரூஷ்யின் குரல் கேட்டது. தண்ணீரில் இருந்து ஹம்சி தத்தலித்தாள். அதை கண்டதும் ஹாரூஷ் சட்டென்று ஆற்றுக்குள் குதித்தான். நீந்தி சென்று ஹம்சியை அள்ளி அனைத்தான். அவளை தூக்கிக்கொண்டு ஆற்றில் இருந்து வெளியே வந்தான். ஹம்சி மூச்சி விட இயலாமல் தடுமாறினாள். ஹாரூஷ் அவளை நெஞ்சோடு அனைத்தான். சற்று நேரத்தில் ஹம்சி கண்களை திறந்தாள்.

"ஹாரூஷ் இங்கு இருந்து செல்லலாம்." அவள் கூறியதும் ஹாரூஷ் அவளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து நடந்தான். ஹம்சி தடுமாறி நடந்தாள். ஹாரூஷ் அவள் தோள் மீது கை போட்டு அவளை அனைத்தவாறு நடந்தான். அவர்கள் இருவரும் ஜீப்பின் முன் வந்து நின்றனர். அப்பொழுது ஜீப் தானாக உயிர் பெற்றது. இருவரும் திடுக்கிட்டு ஜீப்பை பார்த்தார்கள். இருவரின் இதய துடிப்பும் அதிகரித்தது. ஹம்சி ஹாரூஷ்யை பார்த்தாள். ஹாரூஷ் ஹம்சியை பார்த்தான். அவர்கள் பயத்தில் என்ன செய்வது என்று புரியாமல் நடுக்கத்தில் நின்றனர்.

ஹாசினிWhere stories live. Discover now