இரண்டோர் முறையே பார்த்திருந்தாலும், அந்த பெண்ணின் குணம் ஐந்தே நிமிடத்தில் தெரிந்துவிடும் வாயாடி அவள். அவளது அமைதியையே திரும்பி திரும்பி அடிக்கடி பார்த்த அஸ்வினுக்கு, கழுத்து வலியே வந்துவிட்டது.

"பாவமா இருக்குடா! ஃபோர்ஸ் பண்ண வேணாம் சொல்லு." சகோதரனிடம் தூது அனுப்பி வைத்தான். ஆனால், அவனே அந்த நேரம் அஸ்வினுக்கு எதிரி தான். தன் பங்கிற்கு அவளை விழுந்து விழுந்து கவனித்தான்.

அதன்பிறகு பாதி நாள் திவ்யா, ஆரோஹியை சமாதானம் செய்து, மிரட்டி, மதியின் நிலையை எடுத்துக் கூறி என... மூச்சே நின்றுவிட்டது அந்த தம்பதிக்கு.

முடியவே முடியாது என அடம் பிடித்தவளை, இறுதியாக மதியின் கண்ணீர் தான் கரைத்தது. நிர்பந்திக்கப்படுகிறோம் என்கிற உண்மை உரைத்தாலும், சூழ்நிலை கைதியாக்கி இருவரையும் ஒரே நேர்கோட்டில் விதி நிற்க வைத்தது.

அமைதி என்றால் என்னவென்றே தெரியாதவளை, பல குரலோசைகள் அமைதி படுத்திவிட்டது.

"இன்னும் நீ தூங்கலையா அஸ்வின்? ரூமுக்கு போடா." என்றான், அவர்கள் வீட்டின் நாயினை வாக்கிங் அழைத்து சென்று வந்த சித்தார்த்.

"நீங்க பண்ணி வச்சிருக்க வேலைக்கு தூக்கம் ஒன்னு தான் கேடு..." சகோதரனைப் புறக்கணித்து அந்த டாபர் நாய் கழுத்தைப் பிடித்து கொஞ்ச, அது அஸ்வினிடம் சந்தோசமாக தாவியது.

"இன்னைக்கு தூங்குனா தான் நாளைக்கு வேலை பாக்க முடியும்."

"அடிங்க... உதை விழும்டா!"

"நல்லதுக்கே காலம் இல்ல. சரி, அண்ணிகிட்ட பேசுனியா?" புருவம் உயர்த்தி கிசுகிசுத்தான்.

"பேசுற நிலைமைல நானும் இல்ல, அத கேக்குற நிலைமைல அவளும் இல்ல. நான் அவளை இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ பாத்தேன்டா. பேசுவா... ரொம்ப பேசுவா... அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கூட நீயும் பாத்த தான? அதான் அவளோட உண்மையான குணம். உண்மை தெரிஞ்சு அவ அமைதியா இருந்தது ஏதோ உறுத்துது தெரியுமா?" பூட்டி வைத்த குமுறல்கள் எல்லாம் ஆள் கிடைக்கவும் வெளியே வந்தது.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now