பகுதி 6

Start from the beginning
                                    

"எனக்கு சமீபத்துல தான் விவாகரத்து ஆச்சு தாத்தா... பிள்ளைங்க எல்லாம் இல்ல...அந்த ஊருல இருந்தா புகுந்த வீட்டு ஆளுங்களை அடிக்கடி பாக்க நேரிடும்... அது மீண்டும் ரெண்டு தரப்பிலும் தர்ம சங்கடத்தை தான் உருவாக்கும்... அதான் என் தோழனின் சகோதரி வீட்டுல நான் வாடகைக்கு தங்கி இருக்கேன்... வேலை தேட தான் சில ஆவணங்களை நகல் எடுக்க கடை தெருவுக்கு வந்தேன்... அப்போ நடந்த விபத்துல தான்.. இதோ இப்போ உங்க எதிர்ல உங்க பேத்தி பக்கத்துல உக்காந்து இருக்கேன் " என்று துர்வாவின் தாத்தாவிடம் தன் தற்போதைய நிலையை தெளிவாக எடுத்துறைத்தாள் ரோஜா.....

" எல்லாம் நன்மைக்குன்னு நினைப்போம் ரோஜா.... நீ இங்கேயே இரு இதோ நான் இப்போ வரேன் " என்று சொன்ன துர்வாவின் தாத்தா நடையில் வேகத்தை கூட்டி அந்த அறையில் இருந்து தன் அறைக்குள் நுழைந்தவர்... கையில் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு மீண்டும் துர்வாவின் அறைக்குள் நுழைந்தவர் அந்த கார்டை ரோஜாவின் முகத்திற்கு முன்பு நீட்டினார் ..

" என்ன தாத்தா இது... " என்று கட்டிலில் குழந்தை அருகில் இருந்து எழுந்த ரோஜாவின் கேள்விக்கு...

" இது நம்ம லைப்ரரி முகவரி தான் மா... அங்க நம்பிக்கையான ஒரு ஆள் வேலைக்கு வேணும்.... இது கண்டிப்பு இல்ல... உனக்கு விருப்பம்னா நீ இங்கேயே வேலைக்கு சேர்ந்துக்கலாம்....உனக்கு புத்தகம் தான் முதல் நண்பன் என்று துர்வா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் " என்று தாத்தா சொன்னதும்.... முகம் மலர்ந்த ரோஜா...

" இந்த சூழ்நிலையில நான் இந்த வேலையை எதிர் பார்க்கவே இல்ல தாத்தா.... கண்டிப்பா நான் உங்க நூலகத்துல வேலைக்கு வரேன் " என்று சொன்ன ரோஜா அந்த விசிட்டிங் கார்டை தன் கைப்பையில் வைத்து கொண்டவள்,
தன் முந்தானை குழந்தை திக்ஷிதாவின் விரல்களின் நடுவில் இருந்ததை கவனிக்காமல் கட்டிலில் இருந்து எழ முயன்றவளின்  செயலை உணர்ந்து குழந்தை கண்கள் விழித்து...
" அம்மா " என்று அழைக்க....

" திக்ஷி பாப்பா அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டீங்களா.... வாங்க வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சிய ரோஜா.... குழந்தையை மீண்டும் தன் மடியில் அமர்த்தி கொண்டாள் ....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now