பகுதி 2

101 15 4
                                    

குறை ஒன்றும் இல்லை

பகுதி  2....

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது....93.5FM அடுத்ததாக உங்களுக்கான பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்...

[ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே ]

என்ற பாடல் ஒலித்ததும்... அந்த பாடலை செவி கொடுத்து கேட்டப்படி ரோஜா பயணிக்கும் காரில் அவளின் தந்தையும் தோழியும் உயிர் நண்பனும் பயணித்தனர்....

ரோஜாவின் தந்தைக்கு... விம்பி அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றியது தான் மிச்சம்..

"அங்கிள் இப்போ ஏன் அழறீங்க.... அப்படிப்பட்ட சுயநலவாதிக்கூட ரோஜா வாழறதுக்கு அவ வாழாவெட்டியா உங்க வீட்டுலேயே இருக்கலாம்'.... என்றான் ரோஜாவின் நண்பன்.......

"ஆர் யு ஜோக்கிங்.... கணவனை விவாகரத்து பண்ணிட்டா அந்த பெண்களுக்கு நீங்க தர Nick Name வாழாவெட்டியா..?? என்ன பிற்போக்கு சிந்தனை டா உனக்கு".... என்று ரோஜாவின் தோழி அவன் நண்பனை கடிந்து கொண்டாள்....

"யார் என்ன பேசினா என்ன......
என்னோட வாழ்க்கையில் எல்லாமே என் அப்பாவின் ஆசை தான்....
படிக்கும் போதே என் படிப்பை பாதியில் நிறுத்திட்டு என் 19 வயதில் ஊர் உலகத்துல இல்லாத மன்மத மாப்பிளையை கட்டி வச்சாரு....

அவர் என்னடானா தன் மேல இருக்குற கருப்பை மறைக்க என்னை இத்தனை வருஷமா தாரில் குளிக்க வச்சி தேரில் ஊர்வலம் கூட்டி வந்தார் ....

ஐயோ..... போதும் டா சாமி...
எப்படியோ இன்று முதல் எனக்கும் விடிவு காலம் தான்".....என்று தனக்குள் பேசிய ரோஜாவின் கண்கள் அவளை கேள்ளாமல் கலங்கியது....

ரோஜாவின் கண்ணீரை பார்த்த அவளின் தோழி....."ஏன் டி அழற.... இனி நீ அழ கூடாது.... அவன்கூட உனக்கு டிவோர்ஸ் ஆனதை பற்றியெல்லாம் எள்ளுளவும் யோசிக்காத" என்று ஆறுதல் சொன்னாள்....

"எனக்கு அவர் கூட விவாகரத்து நடந்த கதையை நான் மறக்க நினைக்கல.... எனக்கு கல்யாணம் நடந்தையே நான் நினைக்க மறுக்கிறேன்"...என்று திட்டவட்டமாக சொன்னாள் ரோஜா....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now