ரோஜா 🌹

Start from the beginning
                                    

இங்கே யார் பேசுவதையும் காதில் வாங்கி கொள்ளாமல், எனக்கும் இங்கே நடக்க்கும் எந்த நிகழ்வுக்கும் சம்மந்தம் இல்லையென்று தன் நடத்தையில் தெரிவித்தப்படி நின்று இருந்த ரோஜாவின் கணவன் கைபேசி ஒலித்தது ....

Hello....
என்று அவன் பேச தொடங்கியதும் .... முகம் இறுகி... தன் கைபேசியை கீழே தவற விட்டவனின் போனை எடுத்து..

Hello யாரு பேசுறது....உங்களுக்கு யாரு வேணும்....
என்று அதட்டலாக கேள்வி கேட்ட ரோஜாவின் மாமியாருக்கு ஒருவர் பதில் சொல்ல.....ரோஜாவின் மாமியார் முகம் பிரேகாசமாக ஒளி விசுவதை பார்த்து அனைவரும் குழம்பி போனார்கள் ....

என்னாச்சு மா...தம்பி போன்ல யாரு பேசுனாங்க.... நீ என்ன திடிர்னு இவ்வளவு சந்தோஷமா இருக்க....
என்று ரோஜாவின் நாத்தனார் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல்... தன் மருமகளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமுட்டவள்...

என் ராஜாத்தி...
என் தங்கமே...
என் குளம் செழிக்க வந்த மகாலக்ஷ்மியே....
ஏன் நீ என்கிட்ட இந்த நல்ல செய்தியை சொல்லவே இல்ல....
என்று ரோஜாவின் மாமியார் உரிமையுடன் ரோஜாவை கேக்க....

கூடி இருக்கும் அனைவரின் முகத்திலும் சந்தேக கேள்வி அப்பட்டமாக தெரிந்த நேரத்தில்...

என்ன சம்மந்தி...??என்ன சொல்றிங்க நீங்க....!! என்ன சந்தோஷமான விஷயம்...??
என்று ரோஜாவின் அப்பா ஏக்கத்துடன் கேக்க...

சம்மந்தி.... நம்ம தாத்தா பாட்டியாக போறோம்.... உங்க பொண்ணு... இல்ல இல்ல என் மருமக மசக்கையா இருக்கா சம்மந்தி... என்று சொன்ன ரோஜா மாமியாரின் முத்தம் மீண்டும் இலவசமாக ரோஜாவிற்கு கிடைத்த தருணம்....

என்ன சொல்றிங்க அம்மா ... அப்போ நம்ம ரோஜா மாசமா இருக்காளா... டேய் தம்பி வாழ்த்துக்கள் டா.....
என்று ரோஜாவின் நாத்தனார் தன் தம்பியின் வலது கையை குலுக்கிய வேளை... சட்டென்று தன் அக்காவின் கையை உதறியவன்....
தனக்கு நேராக நிற்கும் ரோஜாவின் கழுத்தை பிடிக்க..

கூடி இருக்கும் அனைவரும் திகைத்து போய் பார்த்து கொண்டு இருந்தவர்கள்....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now