அத்தியாயம் 41

Começar do início
                                    

என்று மீராவோடு சேர்ந்து தான்விக்கும், சிவா விற்கும் திட்டு விழுந்தது...

ஆமா ஆமா... பார்தீங்கள்ல என் அம்பு வ... எப்படி இந்த வயசிலயும் சும்மா செக்ஸி யா இருக்காங்கன்னு... என்று அகிலனும் பாட்டியை சீண்டினான்..

அது பெண்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்த...
போடா போக்கிரி என்றபடி பாட்டி அகிலனின் முதுகில் ஒன்று வெய்த்தார்.

அதற்கு பின்பு மீராவும் நிகழ்காலத்தில் இருக்க... அங்கு ஒருவருக்கொருவர் பாசத்தோடும் , சீண்டலோடும் பேசிக்கொண்டதை பார்க்கும் போது ஏனோ கௌசிக்கிர்க்கு தான் அங்கு அந்நியமாய் இருப்பதாய் தோன்றியது.

அகிலன் எதோ சொல்ல அதற்கு மீரா அவனுக்கு support செய்ய, அவளது தலையை அவன் பாசமாய் தடவிவிட்டு தன் தங்கையை பார்த்து கொக்காணி காட்டினான்.

அவன் தலையை தொட்டு தடவியதை , சிறு முக சுளிப்பு இல்லாமல் மீரா புன்னகையோடு ஏற்றுக்கொண்டது கௌசிக்கிர்க்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரும்பொழுதே காரில் வைத்து "நீயும் என் தங்கை போல தான்" என்று அகிலன் மீராவை பார்த்து சொன்ன வார்த்தை தான் , அவள் அவனது தொடுகையை எந்த விதமான சங்கடமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டதற்கு காரணம்.. அதை கௌசிக் அறிய வாய்ப்பில்லை தானே ?

அவ்வளவு நேரம் ருசியாய் தெரிந்த உணவு சட்டென்று சப்பென்று ஆனது கௌஷிக்கிர்க்கு... வேக வேகமாக சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் மீரா வை திரும்பிக் கூட பார்க்காது...

அதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டு தான் இப்பொழுது அமர்ந்திருந்தான்.

இதை தானே எதிர்பார்த்தேன்... இதுபோல மீராவிர்க்கு ஒரு பாசமான, சந்தோஷமான குடும்பம் கிடைக்க தானே வலிக்க வலிக்க அவள் காதலையும் மறுத்து , என் காதலையும் மறைத்தேன். அப்படி இருக்க நான் ஏன் இப்படி கோபப் படுகிறேன்?

அவனுக்கே காரணம் புரிந்தது... ஆனால் என்ன செய்ய முடியும் அவனால்... காதலின் மாய விளையாட்டை யாரால் வெல்ல முடியும்!!!!!

எனக்காகவே பிறந்தவள்Onde histórias criam vida. Descubra agora