இதயம் 50

757 36 25
                                    

மூன்று மாதங்களுக்கு பிறகு...

சாந்தியின் கைகள் , சமையலறையில் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அவர் தாழிக்கும் வாசனை மூன்று அறையிலும் வசிக்கும் மக்களின் மூக்கையும் துளைத்தெடுத்தது.

வாசனை மூலம் அம்மக்களுக்கு  தூது அனுப்பியவர், மகள்கள் இருவருக்கும் மதிய  உணவை பாத்திரத்தில் அதக்கிக் கொண்டிருந்தார்.

மகன் இல்லாத இவ்வேளையில் மகளாகி போனாள் வைஷு.  வைஷு வந்ததும் மகன் வந்து விடுவான் என்று நினைத்தார். ஆனால் அவள் வந்தும் அவன் வரவில்லை. 'அவன் எங்கு இருந்துக் கொண்டு  கஷ்டப்படுகிறான்? ' என்று அவருக்கு கவலையாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். மீறி காட்டினால் வைஷுவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியது  தான்.

'விட்டுச் சென்றவனை  நினைச்சி அழுதா மட்டும் வந்திடுவானா??? உங்களை என்னையும் வேணானு நினைச்சி  தான போனா ! அவன நினைச்சி ஏன் அழறீங்க?? அவனுக்காக அழுதீங்க அப்றம் நானும் எங்கயாவது போயிடுவேன். உங்கப் பொண்ணுங்க  நாங்க இருக்கும் போது  உங்க பையன மனசு தேடுதா??? பிச்சு... பிச்சு... !"என செல்லமாக மிரட்டினாலும் அதிலிருக்கும் அவளது கோபம் சரி என்பதால் அவரும் அமைதியாக மகனை மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.

இங்கே தலை வாரிக் கொண்டிருக்கும் வைஷுவுக்கும் கூட அவனது நியாபகம் தான்.

எப்பவும் கண்ணாடி முன் நின்றாலே  கட்டியணைத்து கன்னங்கள் உரசி அவளோடு சேர்ந்து அவனும் முகம் பார்ப்பான் ; முத்தம் வைப்பான் ; இன்னும் சில சில்மிஷங்கள் செய்து அவளிடம் அடி வாங்குவான். அந்த அழகான
தருணம் எல்லாம்  முன் திரையில் படமாக ஓட லேசாக விழியோரத்தில் துளிர்த்தன கண்ணீர் துளிகள். அதை துடைத்துக் கொண்டவள் கண்ணாடியில் தெரிந்த அவன் புகைப்பட பிம்பத்தை கண்டதும் 
சீப்பால் அடித்தாள்.

'நாயே ! காதலிச்சிட்டு,  எல்லாத்தையும்  முடிச்சிட்டு என்னை விட்டுட்டு தனியா போய் இருக்கேல.

Dostali jste se na konec publikovaných kapitol.

⏰ Poslední aktualizace: Feb 22, 2023 ⏰

Přidej si tento příběh do své knihovny, abys byl/a informován/a o nových kapitolách!

கரையவில்லை உன் இதயம்Kde žijí příběhy. Začni objevovat