அமைதியாக வாங்கி கொண்டு சென்றார் ஏட்டு.

அப்பொழுது வாசலின் அருகேயே ஒரு பெண் நின்று வெளியே வராமல் பதட்டத்தோடு போன் பேசி கொண்டிருப்பது போல் தோன்றியது. அவளின் முகமே அவள் கெஞ்சி அழுவது போல் காட்டியது. உடனே அங்கு சென்று என்ன விஷயம் என்று கேட்க தோன்றியது.

இருந்தும் அவசரமாக ஏதாவது செய்தால் எதிராளி உஷாராகி விடுவான் என்று கடினப்பட்டு பொறுமை காத்தான்.

முடிவில் அழுது கொண்டே அந்த பெண் வந்து ஐஸை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றவன்.

"போலாம்." என்று ஏட்டுடன் கிளம்பினான்.

"என்ன சார் அப்டியே விட்டுட்டு வந்துட்டோம்? இவனுங்களை ஐஸ் விக்காம பண்ணலாம்ல.." ஆதங்கமாய்.

"போகாம பின்னே என்ன பண்ணனும்? இப்பவே போய் இவனுங்களை புடிக்க சொல்றிங்களா?" என்று கேட்டான்.

"ஆமா சார். இப்பவே பிடிச்சா அந்த பொண்ணுங்களை காப்பாதலாம்ல்..?" என்றார் ஏட்டு பரிதவிப்போடு.

"கரெக்ட். இப்போ போனா இந்த பொண்ணுங்களை மட்டும் தான் காப்பாத்தலாம். ஆனா இன்னும் இவர்களால் யார் பாதிச்சிருக்காங்க, என்ன ஆபத்துல இருக்காங்க... எதுவுமே தெரியாம போய்டும். அதுக்கு இன்னைக்கு ஒரு நாள் அவங்க கஷ்ட படட்டும். அந்த பெண்ணை இன்னைக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க. அதை வச்சு தான் நம்மோட நெக்ஸ்ட் மூவ்." என்றான் ஷிவா.

"சரி சார்." என்று மனமே இல்லாமல் கிளம்பினார்.

ஒரு முறை ஏட்டு கிளம்பி விட்டாரா என்று பார்த்த பின், “ஓகே! இப்போ நீங்க உள்ள போகலாம். பட் எந்த சந்தேகமும் வர கூடாது. நீங்க கண்காணிக்கிறீங்கன்னு யாருக்கும் தெரிய கூடாது. போன் பண்ண வேண்டாம். மெஸ்ஸேஜ் போடுங்க. எமெர்ஜென்சின்னா போன் பண்ணுங்க. பி‌ கேர்புல் அண்ட் பி சேப்.” என்று போனை துண்டித்து விட்டு கிளம்பினான்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now