5.

953 26 2
                                    

அதிர்ச்சியாய் இருவரும் ஷிவாவை பார்க்க, அறிவோ என்ன நடந்தது என்று முழுவதுமாக புரிந்து கொள்ளமுடியாத ஒரு அதிர்ச்சியில் தன் கழுத்தில் புதிதாய் ஏறியிருந்த தாலியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஷிவா! என்னடா இப்படி அவசர பட்டுட்ட?" என்றான் கண்ணன் என்ன செய்வதென்று புரியாமல்.

"என்னை என்னடா பண்ண சொல்ற?அவ பேசினதை கேட்ட தானே? எப்படி பேசிறா பாரு? டேய் அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லடா. இதை இப்படியே வளர விட்டா மனசுக்குள்ளயே புழுங்கி தவிப்பாடா.. என்னால இவளை அப்படி பார்க்க முடியாது. என்கிட்ட கொடுத்திருடா.. என் கண்ணுக்குள்ள வச்சு பொத்தி வச்சு பார்த்துக்குறேன்." என்றான் ஷிவா கண்ணீருடன்.

அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் தங்கைக்காக பேசுவதா?? அவள் மனக் குமறல் எனும் பாதாளத்தில் விழுந்துவிடக் கூடாது என்று தன்னோடு பிடித்துக் கொள்ள போராடும் நண்பனுக்காக பேசுவதா? ஒன்றும் தெரியவில்லை... ஆனால் ஒன்று... இனி தன் தங்கை நன்றாக இருப்பாள் என்ற நிம்மதி உண்டாயிற்று.

அறிவை பார்த்து, “இனி நீ யார்கிட்டயும் போய் எதுவும் சொல்லவும் வேண்டாம்... நீ நல்லவன்னு நிரூபிக்கவும் வேண்டாம்... என் உயிரே போனாலும் இந்த விஷயத்தை பத்தி யாரையும் உன்னை தப்பா ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேன். நானும் பேச மாட்டேன். என்ன நடந்தாலும் உனக்கு இனி நான் இருக்கேன். நான் பார்த்துக்குறேன். என்கிட்ட வந்துரு அறிவு...” என்றான் ஷிவா நா தழுதழுக்க....

அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் பனியாய் இறங்கி குளிர்வித்தாலும்... திடீரென்று முளைத்த காளான் போல் எங்கிருந்தோ வந்து என்ன காரியம் செய்து விட்டான்... யாரிவன் லூசு மாதிரி பேசுறான் என்ற கோபமும் தன் அனுமதியில்லாமல் யாரோ ஒருத்தன் தனக்கு தாலி கட்டிவிட்டான் என்ற கோபமும் சேர்ந்து கொள்ளவும், அவனை அறைய கையை ஒங்கினாள்.

அவள் அவனுடைய அறிவு ஆயிற்றே இப்படி தான் செய்வாள் என்று அறிந்தவன் போல் அவளின் கரத்தை  லாவகமாக தடுத்த ஷிவா மெதுவாய் சிரித்தான்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Tempat cerita menjadi hidup. Temukan sekarang