அவரின் பதட்டம் ஏதோ தவறாய் பட, "என்னாச்சு ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க?" என்றான்.

"ஓ... ஒன்னுமில்லை சார்." என்றார் ஜீவாவை பார்த்ததும் தடுமாறியபடி.

"என்னாச்சு எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கிங்க?" என்று ஆறுதலாக கேட்டான்.

"இல்ல சார். எங்க ஊர்ல தூரத்து சொந்தம் அண்ணன் முறை வேணும். அவர் பொண்ணு இந்த ஹாஸ்டல்ல தான் தங்கிருக்கிறதா சொன்னார். அதுவுமில்லாம புள்ளை ஏனோ ரெண்டு நாளா ஒழுங்காவே பேசலைன்னு வருத்த பட்டாரு. நான் தான் ஒண்ணும் இருக்காது. நான் நேர்ல போய் பார்த்துட்டு வரேன்னு நேத்து நைட் கூட சொன்னேன். இங்க பார்த்தா இப்படி இருக்கு. ஒரு வேளை அந்த புள்ளை இதுல ஏதாவது பாதிச்சுருக்குமோன்னு மனசு கிடந்து அடிக்குது சார்." என்றார் பதட்டமாய்.

சில நொடிகள் யோசித்தவன்.

"நீங்க எதுவும் பயப்படாதீங்க. அப்படி எதுவும் இருக்காது. ஒண்ணு பண்ணுங்க. எதுவும் சொல்லாம இன்னைக்கு சாயந்திரம் அந்த பெண்ணை உங்க வீட்ல ஹெல்த் சரி இல்லை ஹெல்ப் வேணும்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க." என்று கூறி கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் விடுதியில் இருந்து வெளியே வந்து அந்த ஐஸை வாங்கி சென்றனர்.

இதை பார்த்த ஏட்டு பதறினார்.

"சார். அங்க பாருங்க ரெண்டு பொண்ணுங்க ஐஸ் வாங்கிட்டு போறாங்க." என்றார்.

"ஹ்ம்ம்... பார்த்துட்டு தான் இருக்கேன். பொறுமையா இருங்க." என்றவன் தொடர்ந்து கவனித்தான்.

"இப்போ நீங்க நடந்து போற மாதிரி போய்ட்டு உங்களுக்கு ஐஸ் கேளுங்க. அதே ஐஸை கொடுத்தா ஓகே.. இல்ல வேற தந்தான்னா அடுத்து நான் பார்த்துக்குறேன்." என்றான் ஷிவா.

ஏட்டும் நடந்து செல்பவர் போல் சென்று ஐஸ் கேட்டார்.

திடுக்கிட்ட ஐஸ் வியாபாரி உடனே சுதாரித்து வேறு பாக்சில் இருந்து ஒரு ஐஸை எடுத்து கொடுத்தான்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now