நினைத்தாலே இனிக்கும்...

42 3 4
                                    

அவளது மொபைல் போன் ஒலிக்கவும் சிந்தனையிலிருந்து நினைவுக்கு வந்தாள் மகாலட்சுமி. அவளது முகம் பிரகாசமாக சொல்லுங்க அண்ணா என்றாள் உற்சாகமாக. பாப்பா எப்படிடா இருக்க என்றான் எழிலமுதன். நல்லா இருக்கேன் அண்ணா என்று அவனிடம் பேச ஆரம்பித்து மொத்த குடும்பத்திடமும் பேசி முடித்த பிறகு போனை வைத்தாள்.

என்ன மேடம் இப்போ ஹாப்பியா என்ற தோழிகளைப் பார்த்து சிரித்தாள். பிறகு மூவரும் அமைதியாக அமர்ந்திருக்க ஏன் மகா நீ மதன் வீட்டுக்கு வருவதை அவாய்ட் பண்ணுன அந்த பிரேம் ஏன் நீ வருவதை அவ்வளவு எக்சைட்மென்ட்டோட எதிர் பார்த்தாரு என்றாள் அர்ச்சனா.

நான் சொன்னேனே அர்ச்சனா ஸ்டொமக் பெயின் என்ற மகாவிடம் பொய் சொல்லாதடி என்றனர் தோழிகள். இல்லப்பா அது வந்து என்று இழுத்தவளிடம் சொல்ல விருப்பம் இல்லைனா வேண்டாம் என்றனர் தோழிகள்.

விருப்பம் இல்லாமல் கிடையாதுடி ஆனால் அது சொன்னால் மறக்கனும்னு நினைக்கிற விசயங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வரும் அதான் என்றாள். சரிடி விடு என்ற தோழிகள் படுத்துக் கொள்ள சாரிப்பா என்ற மகா மதனோட அம்மா என்னோட அத்தைப்பா என்றாள். என்ன சொல்லுற என்ற அர்ச்சனாவிடம் ஆமாம் பா அவங்க என்னோட சொந்த அத்தை. அப்பா கூடப் பிறந்தவங்க காலேஜ் படிக்கும் போது மாமாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க அவங்களுக்கும் எங்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்றாள் மகா. ஓஓ அதான் நீயும், மதனும் நல்லா ஒட்டிகிட்டிங்களா  சூப்பர் என்ற தோழிகள் உங்க மாமியார் பாரேன் மருமகளுக்கு சாப்பாடு பார்சல் பண்ணி கொடுத்து வீட்ருக்காங்க என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

தோழிகளின் கிண்டல் , கேலி எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே சமாளித்தவளின் கண்கள் கலங்கியதை அவளைத் தவிர யார் அறிவார். கேலி கிண்டலுடன் அன்றைய இரவு கழிந்தது.

மறுநாள் காலை உறங்கி எழுந்த தோழிகள் மூவரும் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் படுத்துக் கொண்டனர். என்னடி எங்கேயாவது போகலாமே என்ற அர்ச்சனாவிடம் நான் வரவில்லை நீங்கள் இரண்டுபேரும் வேண்டும்னா போங்கள் என்று ரம்யா படுத்துக் கொள்ள நானும் வரவில்லை என்றாள் மகாலட்சுமி.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 28, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைத்தாலே இனிக்கும்...Where stories live. Discover now