குரல்...

11 4 2
                                    

அட மனித இனமே

நான் உரைப்பது கேட்கிறதா?

என்னிடம் வரத் துணிந்ததேனோ?

நின் இன்னுயிர் வீழத்தானோ?

என்னருகே வரத் துணிந்த

உனக்கு வாழ துணிவில்லையோ?

இறங்கேன்.. என் மீதிருந்து

சுற்றி பாறேன் மன

கண்கள் திறந்து சாக

வழி தேடிய உனக்கு

வாழ சிறு வழியேனும்

தென்படவில்லையோ? மூட மனித

இனமே உன் உயிர்

நின் அனுமதியோடா இப்பிறப்பெடுத்தது?

இவ்வுயிரினை நீயெடுக்க உலகிலுள்ள

உயிர்கள் எதற்கும் தன்னுயிரை

தானேயெடுக்கும் உரிமை கொடுக்கப்படாத

போது இம்முடிவெடுக்கும் உனக்கெவ்வளவு

துணிச்சல்? இத்துணிச்சலை வாழ்வதற்க்கு

உபயோகியேன்.. ஓர் சிறு

வழியாவது கிடைக்காமலா போய்விடும்?

கீழிறங்கு மூட மனிதா

மன கண்களை திற

உன் வாழ்க்கை அழகானது

இப்பிறப்பு கொடுப்பது ஓர்

முறையே வாழ்ந்துவிட்டு செல்

கோழைத்தனத்திற்கு துணிந்த மனதிற்கு

நீயே பாடம் புகட்டிடு

வேறொருவரை எதிர்பார்த்திடாதே

உனக்கு ஆசானும் நீயே

மாணவனும் நீயே கற்றுக்கொள்

எந்நாளும் என்னிடம் வராதே

நீயே காலனிடம் செல்ல

முயலாதே காலனே வருவான்

அப்போது செல் அதன்

முன்னரே நின் வாழ்க்கை

வரலாறாக ஆக்காவிடிலும் உன்னை

நினைத்தால் சிற்சிலரது உதட்டிலும்

மனதிலும் புன்னகை பூக்கும்படி

செய்துவிட்டு செல் அதுவே

பெரும் வரலாறாக இருக்கும்

இறங்கிடு மனிதா இறங்கிடு

செவி சாய்த்து கேட்டிடு.


- உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.

சொல்லனும் தோணுச்சு buddies.. That's why this poem. Hope u like it.

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 02, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மரண மேடையின் குரலொன்று..Where stories live. Discover now