62 மிதிலாவின் அதிரடி...

Start from the beginning
                                    

அதைக் கேட்டு சிரித்தாள் மிதிலா.

"ஆனா, அவன் சிரிக்க ஆரம்பிச்சான்... உங்களால... அந்த சிரிப்பு அவன் முகத்தில் எப்பவும் நிலைக்கணும். அது உங்க கையில தான் இருக்கு, மிதிலா" என்றான் நம்பிக்கையுடன்.

அவன் சொல்வது சரி என்பது போல் தலையசைத்தாள் மிதிலா.

"நீங்க போங்க மிதிலா. அவன் உங்களைத் தான் தேடிக்கிட்டிருப்பான். மிஸஸ் சக்கரவர்த்தி பண்ண டார்ச்சர்க்கு பிறகு, அவன் உங்களை பார்க்கணும்னு நினைப்பான்."

புன்னகையுடன் எழுந்து நின்ற மிதிலா, ஸ்ரீராமின் அறைக்கு செல்ல வெளியே வந்தாள். அப்போது யார் மீதோ மோத போனவள், ஓரடி பின்னால் நகர்ந்தாள்,

"அவுச்..." என்ற சத்தத்துடன்.

அவள் மோதயிருந்தது வேறு யாருமல்ல, திருமதி சக்கரவர்த்தி தான். அவர்கள் இருவருக்குள்ளும் வெவ்வேறு விதமான எண்ண அலைகள் எழுச்சியுற்றது. அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், மிதிலா அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"ஸ்ரீராமுக்கு இவ்வளவு மட்டமான டேஸ்ட் இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றாள் வேண்டுமென்றே, மிதிலாவை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்.

அதை எதிர் பார்க்காத மிதிலா,  அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டாள்.

"முதல் தடவை, உன்னை எஸ்ஆர்கே கூட சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல பார்த்தப்போ, ஒரு மல்டி மில்லினரையே வலை விரிச்சி பிடிக்கிற அளவுக்கு நீ திறமைசாலியா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. ஸ்ரீராமையே மயக்கியிருக்கேன்னா, நீ திறமைசாலி தான்"

இப்படியெல்லாம் பேசினால், மிதிலாவை கண்கலங்க வைத்துவிட முடியும் என்று திருமதி சக்கரவர்த்தி எதிர்பார்த்தாள். ஆனால் பாவம் அவள். அவளுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. தன் கைகளைக் கட்டிக்கொண்டு அசட்டையாய் நின்றாள் மிதிலா. அவள் அப்படி தெனாவெட்டாய் நின்றதைப் பார்த்து தன் புருவத்தை நெறித்தாள் திருமதி சக்கரவர்த்தி. தன்னால் முடிந்த வரை மிதிலாவை காய படுத்தி பார்த்துவிட நினைத்த திருமதி சக்கரவர்த்தியின் எண்ணம் பலிக்கவில்லை. திருமதி சக்கரவர்த்தியை போன்ற தரம் தாழ்ந்த பெண்ணின் வார்த்தைகளை எல்லாம் தன் தலையில் ஏற்றிக் கொள்வது அவசியமில்லாதது என்று நினைத்தாள் மிதிலா. ஆனால் அதற்காக, அவள் முகத்தை பெயர்க்காமல் அவளை அப்படியே விட்டு விடுவாளா என்ன மிதிலா?

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now