கொடும்பாளூர் கோமகன்

33 1 0
                                    


அந்தப்புரத்தில் மன்னர் எழுந்தருளினார் அவர் முன் பல கேள்விகளுடன் அரச மகளிர் அமர்ந்திருந்தனர்.

மகனே நீ அருள் மொழி ஐ தளபதி ஆக்கியது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி

ஆனால் கொடும்பாளூர் வேளரின் மரண சேதி கேட்டு நீ இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கூட்டம் கூட்டியதன் காரணம் வியப்பாக உள்ளது என செம்பியன் மாதேவி கூறினார்.

தாயே நான் கூற வருவதை கேட்க வேண்டும்

ஈழத்தின் போர் நாம் பரம்பரையாக நடத்துகிறோம்.நானும், ஆதித்த கரிகாலனும் , ஏன் இன்று அருள் மொழியும் தலைமை ஏற்க துடிக்கிறான் ‌. ஏன் என்றால் புலிக்கொடி ஐ விஸ்தரிப்பு செய்ய,நம் முன்னோர்கள் ஆசை நிறைவேற்றிட

இந்நிலையில் நமக்காக கொடும்பாளூர் வேந்தன் உயிர் நீத்தது ஏன் மனதை உடைத்துவிட்டது.

நான் இன்று இங்கு வந்தது குந்தவை ஐ காண . அவளுக்கு ஓர் உயர்ந்த பணியை ஒப்படைக்க,

மகளே கொடும்பாளூர் வேளரின் மகள் இன்று இங்கு தானே இருக்கிறாள்

வேளரின் மரண சேதி கேட்டு கொடும்பாளூரில் அரசியல் நிலைமை அபாயகரமாக உள்ளது.

அந்த மாவீரரின் மகளை பாதுகாப்பு இனி என் பொறுப்பு மற்றும் உன் பொறுப்பு. இனி இந்த சோழ நாட்டில் உனக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் அவளுக்கும் கிடைக்கும்.
இவை அனைத்தும் நேரடியாக இல்லாமல் குந்தவை தேவியின் தோழிக்கு கிடைக்கும் சலுகைகள் ஆகவே அனைவரும் எண்ணம் கொள்ளட்டும் என‌ கூறி தனது மன எண்ணத்தை வெளிப்படுத்தினார் சோழ வேந்தன்

ஓர் இளவரசனின் கதைWhere stories live. Discover now