52 தனிந்த நெருப்பு

Start from the beginning
                                    

"தேங்க்யூ சோ மச், ஸ்ரீராம்"

"மிதிலா ரொம்ப பயந்திருக்காங்க..." என்றான் தன் அம்மாவின் தோளில் சாய்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மிதிலாவை பார்த்தபடி.

"அவ ஒரு ஃபைரோஃபோபிக்ன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றார் ஆனந்தன், ஸ்ரீராமை உற்றுக் கவனித்தபடி.

( நெருப்பை பார்த்து பயப்படும் மனோ வியாதி உடையவர்களுக்கு ஃபைரோஃபோபிக் என்று பெயர்)

மிதிலாவை நெருப்பிடமிருந்து தூரமாய் அழைத்துச் சென்ற, தன்னுடைய உடனடி நடவடிக்கை தான், ஆனந்தனை இந்த கேள்வியை கேட்க வைத்தது என்று புரிந்தது ஸ்ரீராமுக்கு.

"மிதிலா ஒரு ஃபைரோஃபோபிக்கா?" தனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது போல, அவரையே திருப்பி கேள்வி கேட்டான் ஸ்ரீராம்.

ஆமாம் என்று தலையசைத்தார் ஆனந்தன்.

"ஒரு நாள், ஆஃபிசில் நடந்த ஃபயர் ஆக்சிடென்ட்டை பார்த்து அவங்க மயங்கி விழுந்துட்டாங்க. அதனால தான் இன்னைக்கு அவங்களை அங்கிருந்து அழைச்சுக்கிட்டு போயிட்டேன்"

"ரொம்ப நல்ல வேலை செஞ்சிங்க, ஸ்ரீராம். தேங்க்யூ"

"நீங்க எனக்கு நன்றி சொல்லத் தேவையில்ல. அவங்களை கஷ்டப்படுத்துற விஷயத்துல இருந்து அவங்களை பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை"

திருப்தியுடன் தலையசைத்தார் ஆனந்தன்.

அப்பொழுது அங்கு வந்தனர்  ஸ்ரீராம் குடும்பத்தினர்.

"எப்படி இருக்கீங்க மிதிலா?" என்றாள் நர்மதா.

நன்றாக இருக்கிறேன் என்பது போல் தலையசைத்தாள் மிதிலா.

"இந்த மாதிரி விபத்து எல்லாம் எதிர்பாராம நடக்கிறது தான். அதுக்காக நீ உன் மனச குழப்பிக்காத" என்றார் பாட்டி.

கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள் மிதிலா.

"தைரியமா இரு மிதிலா" என்று அவள் தோளை தட்டினான் லட்சுமன்.

"மிதிலாவை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடுங்க" என்று அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தார் புஷ்பா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now