38 அக்கறை

Start from the beginning
                                    

"உன்னோட ஃபிரண்டு சார்பா, நாங்க  வேணும்னா அந்தப் பையனோட அம்மாகிட்ட பேசிப் பாக்கட்டுமா?" என்றார் புஷ்பா.

"இல்ல... தன்னோட கடந்த காலம் யாருக்காவது தெரிஞ்சிடுச்சின்னு தெரிஞ்சா, அவ ரொம்ப மனசு வருத்தப்படுவா" என்றாள் மிதிலா.

"அவ காதலிச்ச பையன் சும்மாவா இருக்கான்? அவளுக்காக அவங்க அம்மாகிட்ட அவன் சண்டை போடலையா? அவ மேல அவனுக்கு உண்மையான அன்பு இருந்தா, அந்த பொண்ணை இப்படி விட்டு கொடுப்பானா?" என்றார் புஷ்பா.

"ஆமாம் மிதிலா,  அவனுடைய காதல் உண்மையா இருந்தா, எப்படியாவது அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் அவன் நினைப்பான். எவ்வளவு பெரிய காரணம் இருந்தாலும், அவளை அவன் விட்டுக்கொடுக்க மாட்டான்... அந்த பொண்ணுக்கே பிடிக்கலனாலும் விட்டுக்கொடுக்க மாட்டான்" என்றாள் நர்மதா.

அவள் கூறியதை கேட்ட போது, ஸ்ரீராமை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை மிதிலாவினால்.

"நர்மதா சொல்றது சரி. அவனுடைய குடும்பமே எதிர்த்தாலும், அவன், அவ கூட தான் நிக்கணும்"

சாந்தாவிற்கு அப்பாடா என்று இருந்தது. அப்போது வீட்டினுள் நுழைந்தார் ஆனந்தன்,

"எதுக்காக என்னை சீக்கிரம் வர சொன்ன சாந்தா?" என்று கேட்டவாறு.

ஸ்ரீராமின் குடும்ப பெண்களை பார்த்தவுடன் ஒன்றும் புரியாமல் நின்றார்.

"இவங்க லக்ஷ்மனோட அம்மா, பாட்டி, அக்கா..." என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தா.

"வணக்கம் மா" என்றார் ஆனந்தன்.

அவர்களும் பதில் வணக்கம் தெரிவித்தார்கள்.

"நாங்க மிதிலாவை ஸ்ரீராமுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம்" என்றார் பாட்டி, ஆனந்தனை திகைக்க செய்து.

ஸ்ரீராம் கருணாகரன் மிதிலாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாரா?

"என்னோட தம்பிக்கு மிதிலாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான். அதனால அவங்களை பொண்ணு கேட்டு நாங்க வந்திருக்கோம். நீங்க எங்களுடைய சம்பந்தத்தை ஏத்துக்கிட்டா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்" என்றாள் நர்மதா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now