38 அக்கறை

Start from the beginning
                                    

அவள் முகத்தைப் பார்த்தவுடனேயே அவள் பதட்டமாக இருப்பதை புரிந்து கொண்டாள் நர்மதா. ஏன் இருக்க மாட்டாள்? இருக்கத் தானே செய்வாள்?

"என்ன ஆச்சி மிதிலா, ஏன் டல்லா இருக்கீங்க?"

அவளைப் பார்த்து, ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தபடி செயற்கையாய் புன்னகைத்தான் மிதிலா.

"இல்லையே... ஏதோ குறையுதே..." என்றாள் நர்மதா.

"உண்மை தான் கா. நான் கொஞ்சம் அப்செட்டா இருக்கேன்" என்றாள் சாந்தாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி.

"என்ன ஆச்சி, மிதிலா?" என்றார் பாட்டி.

"என்னோட ஃப்ரெண்ட், ஒருத்தரை காதலிக்கிறா. பையனோட அம்மா, என் ஃப்ரண்டை அவங்க மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க"

"ஏன் அப்படி சொன்னாங்க?"

"சில வருஷங்களுக்கு முன்னால, அவளுடைய அப்பா, அவங்க அம்மாவை கொன்னுட்டாரு. அவர் இன்னும் ஜெயில்ல தான் இருக்காரு. அதனால என்னோட ஃபிரண்டை அவங்க ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க"

எப்படியாவது அவர்களது மனநிலையை தெரிந்து கொள்ள வேண்டும் மிதிலாவுக்கு. அவர்களைப் பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற போதிலும், இந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்பினாள் அவள்.

படபடவென்ற இதயத் துடிப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றார் சாந்தா. அவருக்கு மனம் பதறியது.

"பாவம்ல அந்த பொண்ணு?" என்றாள் நர்மதா சோகமான முகத்துடன்.

"பாவம், சின்ன வயசிலேயே அம்மாவை இழந்துட்டா. அவளுடைய அப்பாவும் நல்ல மனுஷன் இல்ல. அதோட போகாம, அவளுடைய எதிர்காலத்தையும் அவங்க அப்பாவுடைய செயல் பாதிக்குது." என்றார் புஷ்பா.

"இப்படி செய்றது எவ்வளவு பெரிய தப்பு. அந்த பொண்ணோட அப்பா செஞ்ச தப்புக்காக அந்த பொண்ணை தண்டிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? உண்மையில் சொல்லப் போனா, எல்லாரையும் விட அந்த பொண்ணு தானே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கா...? அந்த பொண்ணுக்கு ஆதரவா இருக்கிறதை விட்டுட்டு, தப்பு செய்யாத அந்த பொண்ணை தண்டிக்கிறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல" என்றார் பாட்டி.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now