35 மேலும் இரண்டு புள்ளிகள்...

Start from the beginning
                                    

மிதிலா தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று தான் ஸ்ரீராம் நினைத்திருந்தான். ஆனால், அவள் யாரையுமே திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை. அப்படி என்றால், அவள் அவனை வெறுக்கவில்லை என்று தானே அர்த்தம்... திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூற, அவளுக்கு உறுதியான, நியாயமான காரணம் இருக்கிறது. தன்னிடம், யாரும் கேட்டால் மட்டுமே  உண்மையை கூறுவேன் என்று அவள் கூறியிருக்கிறாள். அது அப்படியே இருக்கட்டும். அவள் உண்மையை கூற வேண்டிய அவசியமும் இல்லை... அவளிடம் யாரும் கேட்க போவதுமில்லை...!

அவளிடம் உண்மையை கேட்காமல், அவளை தலைகுனிய வைக்காமல், அவளை திருமணம் செய்து கொள்ள முடியாதா என்ன? தன்னுடைய பாணியில், தன் மீது விழப்போகும் பழி பாவத்திற்கு அஞ்சாமல், மிதிலாவை திருமணம் செய்து கொள்ள தயாரானான் ஸ்ரீராம் கருணாகரன். அவளைப் பற்றிய உண்மை தனக்கு தெரிந்துவிட்டது என்று அவன் அவளிடம் கூற முடியும் தான். ஆனால், அவள் அதை பற்றி என்ன நினைப்பாள்? அவளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காக தான் இதையெல்லாம் அவன் செய்கிறான் என்று நினைப்பாள். அல்லது, அவளது இயலாமையை தனக்கு சாதகமாய் அவன் பயன்படுத்திக் கொள்வதாக நினைப்பாள். அவள் நிச்சயம் அப்படித்தான் நினைப்பாள். ஏனென்றால், அவனைப் பற்றிய அவளுடைய எண்ணம், அப்படிப்பட்டது தான். அவளைப் பொருத்தவரை ஸ்ரீராம் அகங்காரம் கொண்டவன், தலைக்கனம் பிடித்தவன், தனது கௌரவத்தை பெரிதாய் நினைப்பவன். அவள் அப்படி நினைப்பதில் தவறும் இல்லை. அவன் அப்படித் தான் இருந்தான். அதனால், அவளது கடந்தகாலத்தை பற்றி அவனுக்கு தெரியும் என்று இப்போது கூறுவது சரியாக இருக்காது.

*அவனது வழியில்* செல்வதை தவிர  அவனுக்கு வேறு வழியில்லை. முதலில், அவள் நிச்சயம் அவன் மீது கோபம் கொள்ளத் தான் செய்வாள்... எரிச்சல் அடைவாள்... ஆனால், நிச்சயம் அவனை புரிந்து கொள்வாள்... அல்லது, அவன் அவளுக்கு புரிய வைப்பான். எது எப்படி இருந்தாலும், மிதிலா அவனுக்கு வேண்டும்... அதே போல, மிதிலாவுக்கும் அவன் வேண்டும்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now