33 தகிக்கும் கடந்த காலம்

Start from the beginning
                                    

இதற்குள் அங்கு மருத்துவர் வந்து சேர்ந்தார். அவரை ஸ்ரீராமின் அறைக்கு அழைத்து வந்தான் பரத். அவளைப் பரிசோதித்த மருத்துவர், அவளுக்கு ஊசி போட்டார்.

"அவங்க எப்படி இருக்காங்க டாக்டர்?" என்றான் ஸ்ரீராம்.

"அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காங்க. எதையாவது பார்த்து பயந்திருக்கணும்..." என்றவர் மருந்துச் சீட்டில் ஏதோ மருந்தை எழுதினார்.

"ஆமாம் டாக்டர்... ஃபயர் ஆக்சிடென்ட்டை பார்த்து பயந்துட்டாங்க"

"ஒ... அவங்களை ரெஸ்ட் எடுக்க விடுங்க. இன்னைக்கு ராத்திரி இந்த மருந்தை மறக்காம எடுத்துக்க சொல்லுங்க. அது அவங்களை கொஞ்சம் அமைதிப்படுத்தும்... நிம்மதியான தூக்கத்தை தரும். அது அவங்களுக்கு அவசியம். மறந்துடாம கொடுங்க."

மருந்துச் சீட்டை ஸ்ரீராமை நோக்கி நீட்டினார் மருத்துவர். ஸ்ரீராம் அதைப் பெறும் முன், அவரிடமிருந்து பெற்றுக் கொண்டான் குகன்.

"நான் வாங்கிட்டு வரேன்" என்றான்.

சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"மறக்காம அந்த மருந்தை சாப்பிட சொல்லுங்க" என்று மீண்டும்  வலியுறுத்தினார் மருத்துவர்.

"மறக்க மாட்டேன் டாக்டர்" என்றான் ஸ்ரீராம்.

அவர்களிடமிருந்து விடை பெற்றார் மருத்துவர். மிதிலாவின் அருகில் அமர்ந்து, கவலையுடன் அவள் தலையை வருடிக் கொடுத்தான் ஸ்ரீராம். அது லட்சுமணனை திகைக்கச் செய்தது. இந்த கரிசனத்தை, ஸ்ரீராம், நர்மதாவை தவிர வேறு யாரிடமும் காட்டியதில்லை. குகன் கூறியதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்றெண்ணியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றான் லக்ஷ்மன். 

ஏராளமான கேள்விகளுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். ஏன் அவள் அப்படி பயந்தாள்? அவனுக்கு தெரிந்து, அவன் பார்த்ததிலேயே தைரியசாலியான பெண் அவள் தான். நெருப்பை பார்த்ததற்காகவா அவள் அப்படி பயந்தாள்? ஆனால், அவள் எதற்காகவும் பயப்பட கூடியவள் அல்லவே...! மிதிலாவின் கதாபாத்திரத்திற்கு பொருந்தாதது போலல்லவா இன்று அவள் நடந்து கொண்டாள்...! அப்படியே நெருப்பை பார்த்து அவள் பயந்தாலும், அதில் மயங்கி விழ என்ன இருக்கிறது? அதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ? அவள் மட்டும் தான் அதற்கு பதில் கூற முடியும். ஆனால் அவள் கூற மாட்டாள்... அதுவும் நிச்சயமாய் ஸ்ரீராமிடம் கூற மாட்டாள். அதை நினைத்து பெருமூச்சுவிட்டான் ஸ்ரீராம்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now