17 தொழிலதிபர்கள் கூட்டம்

Mulai dari awal
                                    

"நானா? இல்லையே..."

"நீ மிஸ் ஆனந்த் கூட தண்ணி ஊத்தி விளையாடுனதை நான் பார்த்தேன்" அவன் கோவப் படாமல் இருக்க எவ்வளவு முயன்ற போதும், அவன் முகத்தில் தெரிந்த கனலை மறக்க முடியவில்லை அவனால்.

"அய்யய்யோ... அது நான் இல்ல எஸ்ஆர்கே. மிதிலா தான் என் மேலே தண்ணி ஊத்தி விளையாடினாங்க" என்றான் பள்ளிகூட பிள்ளைகள் டீச்சரிடம் கூறுவதைப் போல.

ஆம். விளையாடியது மிதிலா என்பது ஸ்ரீராமுக்கு தெரியும். அவனை எரிச்சலடைய செய்ததே அது தானே...! விளையாடியது குகனாக இருந்தால், அவனை தன் கட்டுப்பாட்டிற்குள்  சுலபமாய் கொண்டு வந்து விடுவானே ஸ்ரீராம்... ஆனால், மிதிலாவிடம் அவன் *விளையாடாதே* என்று எப்படி கூற முடியும்? முன்பு இருந்த ஸ்ரீராம் என்றால் கூறியிருப்பான் தான்.  இப்பொழுது தான், எல்லாம் தலைகீழாய் மாறி விட்டதே...!

"எதுக்காக நீ அவங்க கியூபிக்கலுக்கு போனே?"

அதைக் கேட்டு திகைத்தான் குகன். என்ன கேள்வி இது? லேசாய் பொறாமை சுடர் விடுவது போல் தெரிகிறதே...!

"உன்னோட கேபின்குள்ள நுழைய மிதிலாகிட்ட பர்மிஷன் கேட்க போனேன்" என்றான் சீரியஸாக.

அவனைப் பார்த்து முறைத்தான் ஸ்ரீராம்.

"உன்னோட மேனேஜரா இருந்துகிட்டு, நானே உன்னுடைய ரூல்ஸ்ஸை ஃபாலோ பண்ணலைன்னா எப்படி?" என்றான்

"என்னோட மேனேஜரா இருந்துகிட்டு, என்னுடைய ரூமுக்குள்ள நுழைய நீ அவங்ககிட்ட பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் இல்ல. நீ எப்ப வேணாலும் என்னோடு ரூமுக்குள்ள வரலாம்"

"அப்பன்னா சரி" என்றான் நிஜமாகவே நிம்மதியடைந்துவிட்டவன் போல.

"இப்போ எதுக்கு இங்க வந்த?"

"நேத்து நடந்த விஷயம் என்னை  ரொம்ப பதட்டமாக்கிடுச்சி. நல்ல வேலை, நீ சரியான நேரத்துக்கு அங்க போய் மிதிலாவை காப்பாத்திட்ட. உன்னை அங்க பார்த்தவுடனே அவங்களுக்கு நிம்மதியா இருந்திருக்கும் இல்ல?"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Tempat cerita menjadi hidup. Temukan sekarang