15 குறி...

Start from the beginning
                                    

அன்று அவனுக்கு அலுவலகம் செல்லவே தோன்றவில்லை. ஆனால் வீட்டில் இருந்தால், பிரியாவின் சகோதரி லயா எதையாவது செய்து அவனை எரிச்சலடைய செய்வாள்.

அவன் நினைத்தது சரி தான். அவனை எரிச்சலடையச் செய்ய, அவள் எதையோ சமைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை சமையலறையில் பார்த்த நர்மதா, குழப்பத்துடன் புன்னகைத்தாள்.

"நீங்க என்ன செய்றீங்க, லயா? உங்களுக்கு ஏதாவது வேணும்னா சுப்பு செஞ்சு கொடுப்பாரு" என்றாள்.

"அப்படின்னா, நான் இந்த குடும்பத்தில் ஒருத்தி இல்லையா?" என்றாள் லயா.

"இல்ல, இல்ல, நான் அப்படி சொல்லல. நீங்க எங்களுடைய கெஸ்ட். அதனால, நீங்க ஃப்ரீயா இருக்கணும்னு நான் நெனச்சேன் "

"உங்களுக்கு நான் சமையல் அறைக்குள்ள வர்றது பிடிக்கலன்னா நான் செய்ய மாட்டேன்..."

"அட... நீங்க இந்த வீட்ல என்ன வேணா செய்யலாம். சந்தோஷமா?"

"ரொம்ப..." என்று புன்னகைத்தாள் லயா.

அப்பொழுது தான், அவள் சமைத்து கொண்டிருப்பது ப்ரோக்கோலி என்பதைக் கவனித்தாள் நர்மதா.

"வாவ்... ப்ரோக்கோலியா?"

"ஆமாம். நேத்து, வெறும் வேக வச்ச ப்ரோக்கோலியை ஸ்ரீராம் சாப்பிடுறதைப் பார்த்தேன். அவருக்கு ஏதாவது செஞ்சு கொடுக்கலாம்னு நெனச்சேன்"

அவள் கூறியதைக் கேட்டு ஆச்சரியமாய் போனது நர்மதாவிற்கு. அவள் ஸ்ரீராமுக்காகவா சமைத்துக் கொண்டு இருக்கிறாள்? தனது உதட்டை மடித்து எதையோ யோசித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள். ஒரு பெண் செய்யும் கிறுக்கு தனத்தை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவள் ஒன்றும் மந்த புத்தி கொண்டவள் அல்ல. அவள் காதல் திருமணம் புரிந்தவள் ஆயிற்றே. இது என்ன என்று அவளுக்கு புரியாதா என்ன? தனது தம்பிக்கு பொருத்தமான ஒருத்தியை கண்டு பிடித்துவிட்ட சந்தோஷத்தில் திளைத்தாள் நர்மதா.

உணவு மேஜை

லயாவையே கவனித்துக் கொண்டிருந்தாள் நர்மதா. தான் சமைத்த ப்ரோக்கோலியை கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு அமைதியாய் அமர்ந்துவிட்டாள் லயா. அவளுக்குத் தெரியும், அதைச் சமைத்தது அவள் தான் என்று தெரிந்தால், ஸ்ரீராம் அதை சாப்பிட மாட்டான் என்று. அதனால் ஒன்றும் கூறாமல் அமைதி காத்தாள்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now