15 குறி...

Start from the beginning
                                    

முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள், தன் மனதில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை அவனால்.

"என்ன செய்யணும்னு நான் உங்களுக்கு அப்புறமா சொல்றேன்"

"ஓகே, எஸ்ஆர்கே... "

அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம். அவன் அக்கா கூறியது உண்மை தான். மிகப் பெரிய பழி நேராமல் அவனுடைய அம்மா அவனை காத்திருக்கிறார். 7 மணி வரை அவன் அந்த இடத்தில் மிதிலாவுடன் இருந்திருக்கிறான். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த கட்டிடத்தின் கதை முடிந்துவிட்டது. அவன் அக்கா கூறும் வார்த்தைகளை எப்படி அவனால் நம்பாமல் இருக்க முடியும்?

அவனுடைய மனம், சட்டென்று மிஸ் ஆனந்தை பற்றி எண்ணியது. அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், இன்று அவள் அலுவலகம் வர மாட்டாள். அவன் தான், அவளுக்கு இன்று விடுப்பு வழங்கி விட்டானே. லக்ஷ்மணனோ அல்லது குகனோ அவளுக்கு நிச்சயம் ஃபோன் செய்வார்கள். அப்பொழுது தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவள் எப்படி இருக்கிறாள் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்ள, அவன் ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.

இவ்வளவு நடந்த பின், அந்த பெண்ணை எப்படி எதிர்கொள்ள போகிறான் அவன்? அவளுக்கு அவன் மீது மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. அதைப் பற்றி தெரியாமல், அவளிடம் கடுமையாய் நடந்து கொண்டு, அவளை வருத்தப்படும் படி செய்து விட்டான். அவன் அப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது. தனது சக்திக்கு மீறி, அவள் அவனுக்கு உதவியிருக்கிறாள். அதற்காக அவன் இதுவரை நன்றியும் தெரிவிக்கவில்லை, தன் தவறுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவள் மனதில் தன்னைப் பற்றி இருக்கும் தவறான எண்ணத்தை துடைத்தாக வேண்டும். ஒரு நல்ல பெண்ணை காயப்படுத்தியதற்காக மனதார வருத்தப்பட்டான் ஸ்ரீராம்.  தன் தவறுக்காக நாளை அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் என்ன? அது நிச்சயம் அவளிடத்தில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். இதுவரை, யாரிடத்திலும் எதற்காகவும் மன்னிப்பு கேட்காத ஸ்ரீராம், தான் செய்யாத தவறுக்காக, மிதிலாவிடம்  மன்னிப்பு கேட்க தயாரானான்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now