13 உள்ளுணர்வு

Start from the beginning
                                    

ஸ்ரீராமின் பெற்றோரின் திதியை முடித்துக்கொண்டு, தாமதமாக அலுவலகத்திற்கு வந்தான் லக்ஷ்மன். ஒரு டப்பாவை கொண்டு வந்து குகனிடம் கொடுத்தான். திதிக்காக செய்யப்பட்ட வடைகள் அதில் இருந்தன.

"எஸ்ஆர்கே எப்படி இருக்கான்?" என்றான் குகன்.

"வழக்கம் போல தான். பூஜை முடிஞ்ச உடனே கிளம்பிட்டான்"

"இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவன் இப்படியே கஷ்டப்படுவானோ தெரியல" என்று வருத்தப்பட்டான் குகன்.

"இது எல்லாத்துக்குமே சீக்கிரம் ஒரு முடிவு கிடைச்சா நல்லா இருக்கும்" என்றான் லட்சுமணன்.

"அப்படித் தான் நம்பணும்"

"இந்த பாக்ஸ்ல வடை இருக்கு. மிதிலாவுக்கும் கொடு"

"அவங்க இன்னும் ஆஃபிஸ்க்கு வரல"

"இன்னும் வரலையா? ஏன்? அவ வேலை செஞ்சுகிட்டு இருப்பான்னு நெனச்சேனே" என்றான் லட்சுமணன்.

"விடு. ஒருநாள் ரிலாக்ஸா வரட்டும். இன்னிக்கு தான் எஸ்ஆர்கே ஆஃபீஸுக்கு வரமாட்டான் இல்ல...?"

"ஆமாம். நீ சொல்றதும் சரி தான்"

அவர்கள், அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கினார்கள். ஆனாலும், தங்கள் அணியில் புதிதாய் சேர்ந்துவிட்ட மிதிலாவை எதிர்பார்த்து கொண்டு தான் இருந்தார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. மிதிலா வராமல் போனது அவர்களுக்கு ஏமாற்றமாய் போனது. அவள் விடுப்பு எடுத்திருந்தால், அவர்களிடம் கூறியிருக்கலாமே என்று எண்ணம் தோன்றியது.

அப்போது மாலினியிடம் இருந்து குகனுக்கு ஃபோன் வந்தது.

"சொல்லுங்க"

"இன்னைக்கு எங்க அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும், சார். உங்களுடைய டேபில்ல என்னோட லீவ் லெட்டரை வச்சிருக்கேன். நேரிலேயே கொடுக்கலாம்னு தான் ஆபீசுக்கு வந்தேன். பத்தரை மணிக்கு அப்பாயின்மென்ட் இருந்ததால என்னால வெயிட் பண்ண முடியல. அதனால வச்சிட்டு வந்துட்டேன் சார். தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள் மிக நல்லவள் போல.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now